அதிமுகவுக்கு மேலும் 6 கட்சிகள் ஆதரவு

Must read

jayalalitha5656
முதலமைச்சர் ஜெயலலிதா தனது போயஸ் கார்டன் இல்லத்தில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் நேர்காணலை நடத்தி வருகிறார். அவரை கூட்டணி கட்சி தலைவர்களும், பல்வேறு அமைப்பைச் சேர்ந்த நிர்வாகி களும் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். அ.தி.மு.க. கூட்டணிக்கு ஏற்கனவே 400 அமைப்புகள் ஆதரவு தெரிவித்து கடிதம் கொடுத்துள்ளனர்.
இன்று மனித நேய ஜனநாயக கட்சி நிர்வாகிகள் முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். இதே போல் மூவேந்தர் முன்னணி கழக தலைவர் சேதுராமன், புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் தலைவர் ஜான் பாண்டியன், மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார், அப்துல் சமீது மகள் பாத்திமா முகாபர் (இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்) ஆகியோரும் போயஸ்கார்டனில் ஜெயலலிதாவை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

More articles

Latest article