அதிசயம்: நாஞ்சில் சம்பத்தை ஆதரிக்கும் ஜெயா டிவி காம்பியரர்!

Must read

 
73545_1688695414504_7177187_n
“அம்மா” என்றால் அ.தி.மு.க. படையே நடுங்கும். அவரது உத்தரவை கனவிலும் மீறமாட்டார்கள் ரத்தத்தின் ரத்தங்கள். ஒரு அதிமுக பிரமுகர், தனது மகள் மாற்றுக் கட்சியைச் சேர்ந்த பிரமுகரின் மகனை காதலித்து திருமணம் செய்துகொண்டார் என்பதற்காக அந்த திருமணத்துக்கே போகவில்லை.
அதே போல கட்சியில் இருந்து “அம்மா” ஒருவரை நீக்கிவிட்டார்கள் என்றால், அந்த நபரை நேருக்கு நேர் பார்ப்பதையே தெய்வகுத்தமாக நினைப்பார்கள்.  அதே போல பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டாலும், அந்த நபர் பக்கம் தலைவைத்து படுக்க மாட்டார்கள்.
இதுதான் அ.தி.மு.க.வினரின் குணம்!
PhotoEditor-1451793851395
ஆனால் கட்சியி பதவியில் இருந்து  நேற்று நீக்கப்பட்ட நாஞ்சில் சம்பத்துக்கு வெளிப்படையாக தனது ஆதரவை தெரிவித்திருக்கிறார் ஜெயா டிவி காம்பபியரர் ஒருவர்!
அவர்.. பிச்சுமணி  சுதாங்கன்!
“ஜெயா டிவி விவாதங்களில், அ.தி.மு.க.வுக்கு ஆதரவானர்களைத்தான் அழைப்பார்கள். ஆனால் அவர்களைவிட ஆளுங்கட்சிக்கு ஆதரவான கருத்துக்களை வெளிப்படுத்தி அம்மா விசுவாசியாக காட்டிக்கொள்பவர் சுதாங்கன்” என்பது, இவர் காம்பியரிங் செய்யும் விவாத (!) நிகழ்ச்சிகளை பார்ப்பவர்களுக்குத் தெரியும்.
அந்த அளவுக்கு “அம்மா” விசுவாசி, இந்த பிச்சுமணி சுதாங்கன்.
நேற்று ஒரு பத்திரிகையாளர், நாஞ்சில் சம்பத் நீக்கம் பற்றி முகநூலில் பதிவிட்டார். உடனே அந்த பதிவுக்கு, ஆவேச்துடன் பின்னூட்டம் இட்டார் பிச்சுமணி சுதாங்கன்.
அந்த பின்னூட்டத்தில், “நீங்கள் ஒரு பத்திரிகையாளரா? அவர் அதிமுக சார்பில் பேசும்போது நக்கலாக அதிமுகவிற்கு எதிரான பேச்சுக்கள்!” என்று நாஞஅசில் சம்பத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருக்கிறார். அதோடு,” 2006 ஆட்சிக்கு வந்த போது விஜய் டிவியில் உட்கார்ந்திருந்த பொன்முடியை பேசிக்கொண்டிருக்கும் போதே எழந்து வா பேசினது போதும் என்று பாதி நிகழ்ச்சியில் போனில் மிரட்டி வெளியே கொண்டு வந்த கலைஞரைப் போல் செய்யவில்லை!” என்றும் கருத்து தெரிவித்திருக்கிறார்.
பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட ஒருவரை, ஜெயா டிவி பிரமுகர் ஆதரித்து வெளிப்படையாக கருத்து தெரிவித்திருப்பது ஆச்சரியம்தான்.
தமிழ் நாடு tamilnadu பிச்சிமணி  சுதாங்கன் நாஞ்சில் சம்பத் jayatv ஜெயா டிவி nanjil sambath pichaimuthu sudhangan
 

More articles

1 COMMENT

Latest article