அஜீத்துக்கு நடந்த ஆறு மணி நேர ஆபரேஷன்

Must read

ajith-hospital

வேதாளம் படப்பிடிப்பின்போது நடந்த விபத்தில் காயம் அடைந்த அஜித்துக்கு முழங்கால் மற்றும் தோள்பட்டையில் இன்று (14ம் தேதி) ஆபரேஷன் நடப்பதாக இருந்தது.

ஆனால் தீடீர் என்று அஜித்துக்கு வலி அதிகமானதை அடுத்து, நேற்று முன்தினம் மாலை சென்னையின் பிரபல தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு அவருக்கு ஆபரேஷன் நடந்தது. நேற்று மாலை அஜீத் வீடு திரும்பினார். மருத்துவமனையில் இருக்கும் அதே வசதிகளுடன் வீட்டில் அறை ஒன்று தயார் செய்யப்பட்டிருக்கிறது. ஒரு மருத்துவரும், நர்ஸூம் ஷிப்ட் முறையில் உடன் இருக்கிறார்கள்.

ஒன்பது வாரங்கள் கட்டாயமாக ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி இருக்கிறார்கள்.

வீட்டில் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது போன்ற அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஆபரேஷன் முடிந்தவுடன் அவர் 9 வாரங்கள் ஓய்வில் இருக்கவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி இருக்கிறார்கள்.

இங்கே இருந்தால் சந்திப்பதற்கு முக்கிய பிரமுகர்கள் அல்லது ரசிகர்கள் வந்துகொண்டே இருப்பார்கள் என்பதால் விரைவில் வெளிநாடு செல்ல இருக்கிறார் அஜீத் என்றும் சொல்லப்படுகிறது.

More articles

Latest article