அசாம் – நாளை மறுநாள் வாக்குப்பதிவு

Must read

asam
அசாமில் 4ம் தேதி நடைபெற உள்ள முதற்கட்ட வாக்குப்பதிவுக்கான பிரசாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அசாமில் முதற்கட்டமாக 4ம் தேதி 65 தொகுதிகளிலும், 2ம் கட்டமாக 11ம் தேதி 61 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெறுகிறது.
இந்நிலையில், முதல்கட்ட வாக்குப்பதிவுக்கான பிரசாரம் இன்றுடன் நிறைவடைகிறது. அரசியல் கட்சிகளின் தீவிர பிரசாரத்ததால் இந்த தொகுதிகளில் அணல் பறக்கிறது. 15 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சி மாற வேண்டும் என பாரதிய ஜனதா, ஏஜிபி கூட்டணி தலைவர்கள் மேற்கொண்டுள்ளனர்.
ஆனால் காங்கிரஸ் கட்சியே ஆட்சிக்கு வரும் என்று முதலமைச்சர் தருண் கோகோய் நம்பிக்கை தெரிவித்துள்ளார். முதல்முறையாக வாக்களிக்கவிருக்கும் இளைஞர்களிடையே வேலைவாய்ப்பு முக்கிய பிரச்சனையாக உள்ளது. இளைஞர்களின் வாக்குகளை பெறும் கட்சியே ஆட்சி அமைக்கும் நிலையில் உள்ளதாக அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.

More articles

Latest article