4

டில்லி:

சவுதி அரேபியாவில் வீட்டு வேலைக்காக சென்ற தமிழகத்தைச் சேர்ந்த பெண்ணின் கையை அந்நாட்டு அரபு முதலாளி வெட்டித் துண்டித்த சம்பவம் நாடு முழுவதும் கடும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் வெளியுறவு துறை இணை அமைச்சர் வி.கே.சிங் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், ” ஊடகங்கள் மூலமாக நமது நாட்டு மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை சொல்ல விரும்புகிறேன்.

அரசு அங்கீகாரம் பெற்ற ஏஜென்டுகள் மூலமாக  மட்டுமே வெளிநாட்டு வேலைக்குச் செல்லுங்கள். அங்கீகாரம் இல்லாதவர் மூலமாக வெளிநாட்டுக்குச் சென்று அங்கு  உங்களுக்கு ஏதாவது சிக்கல் ஏற்பட்டால், உரிய உதவி கிடைக்க தாமதமாகும்.

போலி ஏஜென்டுகள் வெளிநாடுகளின் சட்ட திட்டங்கள் பற்றி தெரிந்திருக்க மாட்டார்கள்.

ஆகவே அவர்களால்  நீங்கள் செல்லும் நாட்டைப் பற்றி முழுமையான தகவலை அளிக்க முடியாது.

அங்குதான் எல்லா சிக்கலும் துவங்குகிறது.

மொழி தெரியாத ஒரு புதிய நாட்டுக்கு நீங்கள் செல்லும் முன் அந்த நாட்டின் சட்ட திட்டங்களை அறிந்திருப்பது அவசியம். ஆகவே  அங்கீகரிப்பட்ட ஏஜென்டு மூலமாக மட்டுமே வெளிநாட்டு வேலைக்குச் செல்லுங்கள். இல்லாவிட்டால் சொந்த நாட்டிலேயே வேலை பாருங்கள். இந்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் ஏற்படுவது மிகமிக அவசியமான ஒன்று” என்று அவர் கூறினார்.