டில்லி
உணவு விநியோகம் செய்யும் ஜொமோட்டோ நிறுவனம் ஃபீடிங் இந்தியா என்னும் நிறுவனத்துடன் சமூக சேவை செய்ய ஒப்பந்தம் இட்டுள்ளது.
அமெரிக்காவின் உணவு மற்றும் விவசாய நிறுவன கணக்கெடுப்பின் படி இந்திய மக்களில் சுமார் 20% பேர் அதாவது 19 கோடி பேர் ஊட்டச் சத்து இன்றி உள்ளனர். உலகில் உள்ள மொத்த சத்துக்குறைவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளில் மூன்றில் ஒரு பங்கு இந்தியாவில் உள்ளனர். ஐநா சபை கணக்கெடுப்பின் படி இந்தியாவில் 40% உணவு சராசரியாக வீணகிறது. .
இவ்வாறு வீணாகும் உணவுப் பொருட்கள் அறுவடை, போக்குவரத்து,. பதப்படுத்தல், பேக் செய்தல், சமைத்தல், திருமணம், நிகழ்வுகள், உணவு விடுதிகள், தங்கும் விடுதிகள், மற்றும் வீடுகள் என பல இடங்களில் வீணாகிறது. இதை தடுக்க தன்னார்வு தொண்டு நிறுவனமான ஃபீடிங் இந்தியா சேவைகளை செய்து வருகிறது/
தன்னார்வு தொண்டு நிறுவனமான ஃபீடிங் இந்தியா இவ்வாறு உணவுப் பொருட்கள் வீணாவதையும் அவை வீணாகாமல் தேவைப்படுவோருக்கு கொண்டு சேர்ப்பதையும் செய்து வருகிறது. இதற்காக உணவு விநியோகம் செய்யும் ஜொமோட்டோ நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தம் இயற்றி உள்ளது. இதற்கான தொகை குறித்து அறிவிக்கப்படவில்லை.
ஃபீடிங் இந்தியா நிறுவனம் ஒரு லாபம் அற்ற சேவைகளை செய்ய உள்ளது. இதற்கான செலவுகளை ஜொமோட்டோ மூலம் இந்நிறுவனம் செய்ய உள்ளது. உணவுப் பொருட்கள் அல்லது சமைத்த உணவுகள் வீணாகாமல் அவற்றை சேகரித்து பசியால் வாடும் மக்களுக்கு ஜொமொட்டோ எடுத்துச் சென்று அளிக்க உள்ளது. ஒவ்வொரு மாதமும் இது போல் சுமர் 10 கோடி பேருக்கு உணவு வழங்க ஜொமோட்டோ திட்டமிட்டுள்ளது.
இது குறித்தி ஜொமோட்டோ தலைமை அதிகாரி தீபிந்தர் கோயல், “நாட்டின் முக்கிய தேவையான உணவுத் தேவைக்கான இந்த திட்டத்தை நடத்த நாங்கள் முன் வந்துள்ளோம். ஏற்கனவே நாங்கள் ஃபீடிங் இந்தியா, அட்சயப்பாத்திரா உள்ளிட பல நிறுவனங்களுடன் இணைந்து பணி புரிந்துள்ளோம். இந்த சேவை செய்ய எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தமைக்கு நாங்கள் பெருமை அடைகிறோம்” என தெரிவித்துள்ளார்.
இந்த இரு நிறுவனங்களும் இணைந்து இன்னும் ஆறு மாதங்களுக்கு செயல்பட உள்ளன. கடந்த டிசம்பர் மாதம் ஃபீடிங் இந்தியா நிறுவனம் மாதத்துக்கு 78,300 சாப்பாடுகளை அளித்துள்ளது. தற்போது இது மாதத்துக்கு 11 லட்சம் ஆகி உள்ளது குறிப்பிடத்தக்கது. நாட்டில் 82 நகரங்களில் ஃபீடிங் இந்தியா சேவை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.