டெல்லி, அலகாபாத், கான்பூர், லக்னோ, வாரணாசி என 5 ரயில் நிலையங்களில் சோமட்டோ நிறுவனத்துடன் இனைந்து உணவு டெலிவரியை சோதனை அடிப்படையில் கடந்த ஓராண்டாக IRCTC செயல்படுத்தியது.

ரயிலில் நீண்ட தூரம் பயணம் செய்பவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்த இந்த திட்டத்தால் பயணிகள் தாங்கள் விரும்பிய உணவு வகைகளை தாங்கள் விரும்பிய உணவகங்களில் இருந்து நேராக தாங்கள் பயணம் செய்துகொண்டிருக்கும் ரயில் நிலையத்தின் பிளாட்பாரத்திலேயே பெற்று வந்தனர்.

இதற்காக, சோமட்டோ செயலியில் உள்ள ‘Zomato – Food Delivery in Trains என்ற ஆப்ஷன் மூலம் ரயில் என செர்ச் செய்து இருப்பிடத்தை தேர்வு செய்த பின், பயணிகளின் பி.என்.ஆர்(PNR) எண்ணை உள்ளீடு செய்து ரயில் பயணிகள் உணவை ஆர்டர் செய்து கொள்ள முடியும்.

ஆர்டர் செய்த பிறகு குறிப்பிட்ட ரயில் நிலையத்திற்கு ரயில் வந்ததும் பயணிகள் ஸ்டேஷனில் உள்ள சோமாட்டோ டெலிவரி ஊழியரிடம் ஆர்டரை பெற்றுக்கொள்ளலாம்.

ஒருவேளை ரயில் தாமதம் ஆனாலும் சோமாட்டோ ரயில் நேரத்தை டிராக் செய்து டெலிவரியை சரியான நேரத்தில் வழங்கிவிடும்.

IRCTC உடன் இனைந்து சோமாட்டோ வழங்கிவரும் இந்த சேவைக்கு பயணிகள் இடையே நல்ல வரவேற்பு உள்ளதை அடுத்து மேலும் 100 நகரங்களுக்கு இந்த சேவையை சோமாட்டோ நிறுவனம் விரிவுபடுத்தியுள்ளது.