சென்னை: சென்னையில் எந்த ஒரு இடத்திலும் நேற்று விபத்துகள் நிகழவில்லை என சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் விபத்தை பூஜ்ஜி யமாக மாற்றவும், பாதுகாப்பான பெரு நகரமாக மாற்றவும் தேவையான விழிப் புணர்வை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கையை காவல்துறை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இதற்கான  ரீல்ஸ் போட்டிகளும் நடத்தப்பட்டு சிறந்த ரீல்ஸ்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. ‘ZERO ACCIDENT DAY’ என்கிற விழிப்புணர்வு நிகழ்ச்சியினை பல்வேறு இடங்களில் நடத்தி பொதுமக்கள் 26 ஆம் தேதி ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதன் காரணமாக நேற்று எந்தவொரு விபத்தும் இல்லாத நாளாக சென்னை திகழ்ந்துள்ளது.

 

 “சென்னையின் வாகன ஓட்டி களிடையே விழிப்புணர்வு மற்றும் சமூகப் பொறுப்புணர்வை ஏற்படுத் தும் நோக்கில், என்ற வாசகத்து டன் கூடிய ZAD (Zero accident day) விழிப்புணர்வு பிரச்சாரம், சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினரால் தொடங்கப்பட் டது.

இந்த விழிப்புணர்வு பிரச்சார மானது ஆகஸ்ட் 5  தொடங்கி ஆகஸ்ட் 25 ஆம் தேதி வரை 20 நாட்களுக்கு நடை பெற்றது. சென்னையில் உயிரிழப்பு களைக் குறைப்பதில் சிறப்பு கவனம் செலுத்தி விபத்தில்லா நாளாக மாற்று வதே இந்த பிரச்சாரத்தின் முக்கிய நோக்கமாகும்.

இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினரால் பாதுகாப்பாக வாகனம் ஓட்டுவதன் முக்கியத்துவத்தை முன்னிலைப் படுத்தவும் மற்றும் விபத்தில்லா நாளாக செயல்படுத்த வேண்டிய ஆக்கப்பூர்வ மான முயற்சிகள் பற்றிய விழிப்பு ணர்வை ஏற்படுத்தவும்இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் போட்டி அறிமுகப்படுத்தப் பட்டது.

இந்த ஆண்டு பிரச்சார காலத்தில், கடந்த ஆண்டை விட சென்னையில் விபத்துகள் பெருமளவு குறைந்துள்ளன என  சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல் துறையின் செய்திக் குறிப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது.

மேலும்,  விபத்துகளைக் குறைப்பதற்கான விழிப்புணர்வை நோக்கமாகக் கொண்டு மொத்தம் 218 ரீல்கள் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த போட்டியில் எஸ்.பிரவீன்குமார், சதீஷ், கே.சத்தியாஸ்ரீ ஆகியோர்  வெற்றி பெற்றனர், இவர்களுக்கு ரூ.2லட்சம், ரூ.1 லட்சம், ரூ.50ஆயிரம் என பரிசுத் தொகை வழங்கப்பட்டது.இந்த விழிப்புணர்வு பிரச்சாரக் காலத்தில், சென்னையின் சாலைகளில் எந்த உயிரிழப்பும் ஏற்படாததால், 6 நாட்கள் ஜீரோ உயிரிழப்பு நாளாக கருதப்பட்டன. கடந்த ஆண்டு வரை உள்ள மரண விபத்துகளில் 31.7விழுக்காடு குறைவாக பதிவாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டருது.

இந்த நிலையில்,  இந்த விழிப்புணர்வு பிரசார காலத்தில் 6 நாட்கள் சாலை விபத்துகளில் உயிரிழப்புகள் ஏற்படவில்லை என போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர். மேலும் நேற்று (ஆகஸ்டு 26ந்தேதி)  சென்னையில் எந்த ஒரு இடத்திலும் நேற்று விபத்துகள் நிகழவில்லை என சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் ‘ZERO ACCIDENT DAY’ நிறைவேற்றப்பட்டது.