உக்ரைன் தலைநகர் கிவ்-வில் ஊடுறுவியுள்ள எதிரிநாட்டு கூலிப்படை நாசவேலையில் ஈடுபட்டு வருகிறது அதனால் உக்ரைன் மக்கள் ஊரடங்கு உத்தரவை மதித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்று உக்ரைன் அதிபர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ரஷ்ய ஆதரவு நாசகாரர்களின் முதல் நோக்கம் என்னைக் கொல்வது இரண்டாவதாக என் குடும்பத்தினரைக் கொல்வது.
என்னை கொலை செய்ய ரஷ்ய கூலிப்படையினர் திட்டமிட்டிருந்தாலும் நான் நாட்டை விட்டு வெளியேறவில்லை இங்கு தான் இருக்கிறேன் என்று தனது வழக்கமான உரையில் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஜெலன்ஸ்கி தலைமறைவானதாகவும், வேறு நாட்டுக்குச் தப்பிச் சென்றதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், உக்ரைன் அதிபரின் இந்த அறிவிப்பில் அவர் தலைநகர் கிவ்-வில் தனது குழுவினருடன் பத்திரமாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
ராணுவ கட்டுப்பாட்டில் உக்ரைன்… நாட்டை விட்டு வெளியேற தவிக்கும் மக்கள்…