கங்கனா ரனாவத் நடித்த ‘எமர்ஜென்சி’ திரைப்படத்துக்கு பாஜக முட்டுக்கட்டை போடுவதாக Zee Studios நிறுவனம் மும்பை உயர் நீதிமன்றத்தில் கூறியுள்ளது.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் இந்திரா காந்தியாக கங்கனா ரனாவத் நடித்துள்ளார்.

இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகளை நீக்கவேண்டும் என்று சீக்கிய அமைப்புகள் வலியுறுத்தின.

இதையடுத்து குறிப்பிட்ட காட்சிகளை நீக்கிவிட்டு படத்தை வெளியிட தணிக்கை வாரியம் அறிவுறுத்தியது.

இந்த நிலையில், ஹரியானா மாநில தேர்தலில் பாஜக-வுக்கு எந்தவிதமான பாதகமும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக ஆளும் பாஜக-வின் உத்தரவின் பேரில் படத்திற்கு சான்றிதழ் வழங்காமல் திரைப்படத் தணிக்கைக் குழு தாமதப்படுத்துவதாக Zee Studios மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.