கோலாலம்பூர்:

பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்தியாவுக்கு திரும்ப மாட்டேன் என சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மத போதகர் ஜாகீர் நாயக் தெரிவித்துள்ளார்.


தி வீக் இதழுக்கு ஜாகீஸ் நாயக் அளித்த பேட்டியில், ஆக்ஸ்போர்டு டிக்ஷனரியின்படி, மதம் என்பதற்கு தனிப்பட்ட முறையில் கடவுள் மீதான நம்பிக்கை என்று அர்த்தம் உள்ளது.

மதம் என்பது கடவுள் மீதான நம்பிக்கை. உண்மையான மதங்கள் அனைத்தும் கடவுளிடமிருந்து வந்தவையே என்று நம்புகிறோம்.
இந்துக்களின் நம்பிக்கை வேதங்களிலும், முஸ்லிம்களின் நம்பிக்கை குரானிலும், கிறிஸ்தவர்களின் நம்பிக்கை பைபிளிலும் உள்ளது.

ஜிகாத் என்பது அரேபிய வார்த்தை. ஜிகாத் என்பதற்கு போராட்டம் என்று அர்த்தம். ஆனால், ஊடகங்களோ தவறாக மொழி பெயர்த்து ஜிகாத்தை தவறாக கூறுகின்றன.

காங்கிரஸ் உட்பட எந்த கட்சிக்கும் நான் நெருக்கமானவன் இல்லை. நூறு சதவீதம் மக்கள் நான் சொல்வதையா கேட்கிறார்கள்.

கடந்த இரண்டரை ஆண்டுகால ஆட்சியில் என்ன நடந்ததோ, அனைத்தும் அரசியல் விளையாட்டு. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், நான் இந்தியாவுக்கு திரும்பி வரமாட்டேன் என்றார்.