டெல்லி: காஷ்மீர் பைல் படம் குறித்து டெல்லி பிரதமர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறிய தகவலால் எரிச்சல் அடைந்துள்ளனர் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் கட்சியினர், இந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்த்து இந்துத்துவா அமைப்பான யுவமோர்ச்சா இன்று டெல்லியில் போராட்டம் நடத்தினர்.

அப்போது முதல்வர் கெஜ்ரிவால் வீடு மீது தாக்குதல் நடத்தினர். அவரது வீட்டில் அமைக்கப்பட்டிருந்த  சிசிடிவி காமிராவை அடித்து நொறுக்கிய துடன், அவரது வீட்டு சுவரிலும் சிவப்பு பெயின்டால் எச்சரிக்கை விடுக்கும் வகையில் கிறுக்கி உள்ளனர்.

டெல்லியில் உள்ள காஷ்மீர் பண்டிட்கள், இஸ்லாமியர்களால் கொடுமைப்படுத்தப்பட்டு, அங்கிருந்து வெளியேற்றப்பட்டதாக, ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு பாஜக ஆளும் மாநிலங்களில் வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதுபோல, டெல்லியிலும் வரிவிலக்க அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இதுகுறித்து டெல்லி சட்டப்பேரவையில் பேசிய  டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், நீங்கள் படத்தை அனைவரிடமும் கொண்டு சேர்ப்பதில் மிகுந்த ஆர்வமாக இருக்கிறீர்கள் எனில்  இயக்குனர் விவேக் அக்னிகோத்ரியிடம் படத்தை யூடியூப்பில் வெளியிடுமாறு கேட்டிருக்க வேண்டும். அங்கு வெளியிடுவதற்கு எந்த வரியும் கிடையாது. ஒரே நாளில் அனைவராலும் பார்க்க முடியும் என கிண்டல் செய்திருந்தார்.

இது அங்கிருந்த பாஜகவினரை கோபமடையச் செய்தது.  அரவிந்த் கெஜ்ரிவாலின் பதிலுக்கு கடுமையான கண்டனத்தை பதிவு செய்தனர். இதையடுத்து ஆர்எஸ்எஸ்-ன் துணை அமைப்பான யுவமோச்சா அமைப்பினர் கெஜ்ரிவாலுக்கு எதிராக இன்று போராட்டத்தில் குதித்தனர். இனறு மாலை சுமார் 100க்கும் மேற்பட்டோர். கெஜ்ரிவால் வீடு அமைந்துள்ள பகுதிக்கு வந்து போராட்டம் நடத்தியதுடன், பாதுகாப்புக்கு  நின்ற போலீசாரையும் மீறி தடுப்புகளை தாண்டி வீட்டின் வாசலுக்கே சென்றனர்.

அங்கிருந்த சிசிடிவி கேமராக்களையும், தடுப்புகளையும் உடைத்தெறிந்தனர். சிவப்பு பெயிண்டை வாசல் கேட்டிலும், சுற்றுச்சுவரிலும் அடித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

இது குறித்து தெரிவித்த ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை கொல்ல பாஜக முயற்சி செய்கிறது. தேர்தலில் தோற்கடிக்க முடியாத காரணத்தால் தற்போது நாச வேலைகளில் பாஜக ஈடுபடுகிறது. குண்டர்கள் போலீசாரின் உதவியுடனே கெஜ்ரிவாலின் வீட்டை முற்றுகையிட்டனர். குண்டர்களின் நாசவேலைக்கு போலீசாரே உதவி புரிந்துள்ளனர் எனக் குறிப்பிட்டுள்ளார்.