அமராவதி: ஆந்திர மாநிலத்தில் தெலுங்குதேசம் வெற்றி பெற்ற நிலையில், கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியின்போது, விசாகப்பட்டினம் கடற்கரை சுற்றுலா பகுதிக்கு சூட்டப்பட்டிருந்த அப்துல் கலாம் பெயரை எடுத்துவிட்டு, ஒய்.எஸ்.ஆர். வியூ பாயிண்ட் என மாற்றிய நிலையில், தற்போது அந்த பெயர் அகற்றப்பட்டு மீண்டும் அப்துல் கலாம் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தலுடன் ஆந்திரா மாநில சட்டமன்ற தேர்தலும் நடைபெற்றது. இதில் தெலுங்குதேசம் பவன் கல்யாண் கட்சி மற்றும் பாஜகவுடன் கூட்டணி அமைத்து களமிறங்கியது. மொத்தம் உள்ள 175 தொகுதிகளில் தெலுங்கு தேசம் 133 தொகுதிகளிலும், பவன் கல்யாணினி ஜனசேனா கட்சி 21 தொகுதிகளிலும் பாஜக 8 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. அதன்படி 160க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தெலுங்கு தேசம் கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றி உள்ளது.
அதே சமயம், கடந்த 5 ஆண்டுகளாக ஆட்சி புரிந்த ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி படு தோல்வி அடைந்தது. இக்கட்சி வெறும் 13 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியாமல் தோல்வியை தழுவியது. ஜெகன் கட்சியை சேர்ந்த அமைச்சர்களான ரோஜா உட்பட பலர் தோல்விஅடைந்தனர். முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் பீலேர் தொகுதியில் போட்டியிட்ட பெத்திரெட்டி ராம சந்திர ரெட்டி ஆகியஇருவர் மட்டுமே அமைச்சரவையில் இருந்து வெற்றி பெற்றனர்.
இதே போன்று மொத்தமுள்ள 25 மக்களவை தொகுதிகளில் தெலுங்கு தேசம் 16 தொகுதிகளையும், ஜனசேனா 2 தொகுதிகளையும், பாஜக 3 தொகுதிகளையும் வென்றுள்ளது. ஆளும் ஜெகன்மோகன் ரெட்டியின் கட்சி வெறும் 4 மக்களவை தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியின்போது, கடந்த தெலுங்குதேசம் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பல திட்டங்கள் நிறுத்தப்பட்டதுடன், பல இடங்களில் வைக்கப்பட்டிருந்த பெயர்களும் மாற்றப்பட்டது, ஜெகன்மோகன் ரெட்டியின் தந்தையான மறைந்த ஒய்எஸ்ஆர் ரெட்டி பெயர்களே சூட்டப்பட்டன. இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது. இருந்தாலும், அதை கண்டுகொள்ளாத ஜெகன் அரசு, அமராவதி திட்டத்தையும் நிறுத்தியுதுடன், விசாகப்பட்டிணம் கடற்கரை பூங்காவுக்கு வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பெயரையும் அகற்றிவிட்டு, தனது தந்தை பெயரை வைத்தார். இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்திது.
இதுகுறித்து கருத்து தெரிவித்திருந்த சந்திரபாபு நாயுடு, விசாகப்பட்டினத்தில் உள்ள அப்துல் கலாம் வியூ பாயின்ட் ஒய்.எஸ்.ஆர் வியூ பாயின்ட் என பெயர் மாற்றம் செய்யப்பட்டதை கண்டு வருத்தம் அடைந்தேன். பெயர்களை மாற்ற இது என்ன மனநோய் சாடிசம்? இது நேர்மை, ஒழுக்கம் மற்றும் விடாமுயற்சியின் உருவகமாக விளங்கிய மக்களின் அன்புக்குரிய ஜனாதிபதியை அவமதிப்பதைத் தவிர வேறில்லை என தனது வருத்தத்தை தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தற்போது நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தெலுங்குதேசம் அமோக வெற்றி பெற்றுள்ளதால், ஜெகன்மோகன் ரெட்டி மாற்றிய பெயர்கள் மீண்டும் மாற்றப்படும் என தெலுங்குதேசம் கட்சி தலைவர்கள் கூறினர்.
அதன்படி, ஆந்திர பிரதேச மாநிலத்தின் விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்கரைபகுதி ல் புகழ் பெற்ற சுற்றுலா தலமாக இருந்து வருகிறது. இந்த கடற்கரை சார்ந்த சுற்றுலா தலத்திற்கு, முன்னதாக இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் – அப்துல் கலாம் பெயர் சூட்டப்பட்டு இருந்தது. அதை, முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, அகற்றிவிட்டு, அந்த சுற்றுலா தலத்திற்கு ஒய்.எஸ்.ஆர். வியூ பாயிண்ட் என பெயர் மாற்றம் செய்தார்.
தற்போது மீண்டும் தெலுங்குதேசம்கட்சி வெற்றிபெற்றுள்ள நிலையில், தெலுங்குதேசம் தொண்டர்கள் நிர்வாகிக,ள, ஒய்.எஸ்.ஆர். வியூ பாயிண்ட் கடற்கரையின் பெயர் பலகையில் தெலுங்கு தேசம் கட்சியின் தொண்டர்கள் அப்துல் கலாம் வியூ பாயிண்ட் என்ற பழைய பெயரை மீண்டும் ஸ்டிக்கரிங் செய்தனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது