ஆங்கிலம் பேசியவருக்கு அடி உதை : டில்லியில் அக்கிரமம் !

Must read

டில்லி

ங்கிலத்தில் பேசியதற்காக ஒரு இளைஞரை ஐந்து பேர் கொண்ட கும்பல் தாக்கி உள்ளது.

நொய்டா வை சேர்ந்தவர் வருன் குலாடி (வயது 22).  இவர் தனது நண்பர் அமன் என்பவரை டில்லி கனாட் பிளேஸில் உள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலில் கொண்டு போய் விட தனது மற்றொரு நண்பரின் காரில் வந்துள்ளார்.  ஓட்டலில் விட்ட பின் இருவரும் ஆங்கிலத்தில் பேசியபடி வெளியே வந்துள்ளனர்.

அப்போது அங்கு வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் வருணிடம் அவர் ஆங்கிலத்தில் பேசியது தவறு எனக் கூறி தகராறு செய்தனர்.  வாக்குவாதம் முற்றிப் போய் வருணை அந்த ஐந்து பேரும் சூழ்ந்து சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர்.  அவர் அடி தாங்காமல் கீழே விழுந்துள்ளார்.

அதன் பின் அந்த ஐவரும் ஒரு வாகனத்தில் ஏறி தப்பிச் சென்றனர்.  வருண் அந்த வாகனத்தின் பதிவு எண்ணை குறித்துக் கொண்டுள்ளார்.  இது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார்.  வாகனத்தின் எண்ணைக் கொண்டு அந்த வாகனத்தை கண்டுபிடித்த போலீஸ் இதுவரை மூன்று பேரை கைது செய்துள்ளது.  மற்ற இருவரும் தேடப்பட்டு வருகின்றனர்.

 

More articles

Latest article