மேட்டூர்:
காவிரி வெள்ளத்தில் சிக்கிய 3 இளைஞர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

கனமழை காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளவான 120 அடியை எட்டியது. இதையடுத்து அணையில் இருந்து ஒரு லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டதால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இந்தச்சூழலில் மேட்டூர் அணையின் 16 கண் மதகு அருகே ஆற்றின் வெள்ளப்பெருக்கில் 3 இளைஞர்கள் சிக்கி கொண்டனர்.
தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் ஒரு மணிநேர போராட்டத்திற்கு பின் 3 இளைஞர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
Patrikai.com official YouTube Channel