திருச்சி: போலி வாக்காளர் அட்டை தயாரித்து கொடுத்து வந்த தமீம் என்ற வாலிபர் கைது செய்யப்பட்டு உள்ளார். இந்த சம்பவம் பெரம்பலூர் மாவட்டம் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்வில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் போலி பாஸ்போர்ட், போலி ஆதார், போலி டிரைவிங் லைசென்ஸ், போலி வாக்காளர் அட்டை உள்பட அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் அனைத்து வகையான அடையாள அட்டைகளை சில கும்பல்கள் தயாரித்து, அதன்மூலம் முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்த போலிகளால், சமூக விரோத செயல்கள், போதை பொருள் கடத்தல், வெடிகுண்டு தாக்குதல் போன்ற சம்பவங்களும் அரங்கேறுகினற்ன. இதுபோன்ற கும்பலை காவல்துறையினர் கண்காணித்து வேட்டையாடி வருகின்றனர். இருந்தாலும் வீடுகளிலும், மக்கள் நெருக்கம் உள்ள பகுதிகளிலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றன.
இந்த நிலையில், பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள லப்பைக்குடிக்காட்டில் போலியாக வாக்காளர் அட்டையை தயாரித்து கொடுப்பது தெரிய வந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், போலி அடையாள அட்டை, வாக்காளர் அட்டை தயாரித்து கொடுத்த கம்ப்யூட்டர் சென்டர் கடை உரிமையாள தமீம் என்ற இலாமியரை கைது செய்தனர்.
இவர் பெரம்பலூர் மாவட்டம், லப்பைக்குடிக்காடு அபுபக்கர் தெரு பேரூரை சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. அவரது முழு பெயர் முகமது தமீம் (வயது 33). இவர் அங்கு கம்ப்யூட்டர் சென்டர் மற்றும் ஜெராக்ஸ் கடை வைத்து நடத்தி வருகிறார். இதன்மூலம் போலி அடையாள அட்டைக்ளை தயாரித்து வழங்கி வந்துள்ளது.
இவரது கடையில் தெற்கு தெருவை சேர்ந்த அபுதாஹிர் மகன் சாஜித் என்பவர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணபிக்க வாக்களர் அடையாள அட்டையை பதிவு செய்துள்ளார். ஆனால், 3 மாதமாகியும் அட்டை வராததால், கம்பியூட்டர் சென்டரில் சென்று கேட்டுள்ளார். முகமது சமீம் உடனடியாக வாக்காளர் அட்டையை தயார் செய்து கொடுத்துள்ளார். இந்த போலி அட்டையைக் கொண்டு சாஜித் பாஸ் போர்ட் பெற விண்ணப் பித்துள்ளார். பாஸ்போர்ட் ஆவணங்கள் சரிபார்ப்பின் போது, சாஜித்தின் வாக்காளர் அட்டை போலி என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். வேறு ஏதேனும் அரசு ஆவணம் உள்ளதா என கேட்டுள்ளனர்.
வாக்காளர் அட்டை போலி என்பதால் இது குறித்து, லப்பைக் குடிக்காடு வி.ஏ.ஓ ஐயப்பனிடம் புகார் செய்யப்பட்டது. அவர் இதுபற்றி மங்களமேடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் முகமது சமீம் கடையை ஆய்வு செய்ததில் அங்கு இதுபோல ஏராளமான போலி வாக்காளர் அடையாள அட்டை தயாரித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை போலீசார் கைப்பற்றினர்.
இதையடுத்து தமீமை கைது செய்து, போலீசார் நடத்திய விசாரணையில், பென்னகோணம் கிராமத்தை சேர்ந்த பெருமாள் மகன் வீரன் (47), என்பவர் பக்ரைன் நாட்டில் இருந்து, தனது மனைவி விஜயலட்சுமி மூலம் பாஸ்போர்ட்டை போலி வாக்களர் அட்டை மூலம் விண்ணப்பித்துள்ளதும் தெரியவந்தது. தொடர்ந்து இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.
முகமது தமீம் மீது குற்றப்பிரிவு 330/2024 u/s 318(2), 318(4), 336(3),340(2) பி.என்.எஸ். ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்தனர். பின்பு அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.