ரூக்காபாத்

டப்பாண்டு தேர்தலில் பாஜகவுக்கு 8 முறை வாக்களித்ததாக வீடியோ வெளியிட்ட வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் பரூக்காபாத் தொகுதியில் பா.ஜனதா சார்பில் முகேஷ்ராஜ்பூதி போட்டியிடுகிறார். கடந்த 13 ஆம் தேதி இந்த தொகுதிக்கு 4-ம் கட்டத்தேர்தலாக வாக்குப்பதிவு நடந்தது.  அப்போது  வாலிபர் ஒருவர் பாஜக வேட்பாளருக்கு 8 முறை ஓட்டுப்போடுவது போன்ற காட்சி சமூகவலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

தேர்தல் ஆணையம் வாக்குச்சாவடிக்குள் செல்போன் கொண்டு செல்லவும், வாக்காளர் ஓட்டுப்போடுவதை படம் பிடிக்கவும் தடை விதித்துள்ள போதும் இந்த வாலிபர் சர்வசாதாரணமாக பா.ஜனதாவுக்கு 8 முறை ஓட்டுப்போட்ட காட்சி வெளியானது.

அகில இந்திய காங்கிரஸ் கட்சி இந்த வீடியோவை தனது அதிகாரப்பூர்வ ‘எக்ஸ்’ பக்கத்தில் பகிர்ந்து, ‘ தேர்தல் ஆணையமே, இந்த வீடியோவை பார்த்தீர்களா?, ஒரு நபர் 8 முறை ஓட்டுப்போடுகிறார். நீங்கள் விழித்திருக்க வேண்டிய நேரம் இது.’ என்று பதிவிட்டிருந்தது.

மேலும் சமாஜ்வாடி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவ்வும், தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் வீடியோவை பதிவிட்டு, ‘இது தவறு என்று தேர்தல் ஆணையம் உணர்ந்தால், கண்டிப்பாக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால்… பா.ஜனதாவின் பூத் கமிட்டி உண்மையில் கொள்ளை கமிட்டிதான்’ என்று பதிவிட்டிருந்தார்.

நேற்று 8 முறை ஓட்டுபோட்ட வீடியோ வெளியிட்ட ராஜன் சிங் என்ற வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வாக்குப்பதிவு மையத்தில் தேர்தல் பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரப்பிரதேச தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு பிறப்பித்துள்ளார். /இங்கு மறு வாக்குப்பதிவு நடத்தவும் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.