சென்னை: சமூக வலைதளங்களுல் ஒன்றான இன்ஸ்டாகிராம் மூலம் இளைஞர்களுடன் பழகி, அவர்களை மூலைச்சலவை செய்து, கஞ்சா விற்பனையில் ஈடுபடுத்தி பணம் சம்பாதித்து வந்த வடமாநில இளம்பெண் கைது செய்யப்பட்டு உள்ளார். இந்த சம்பவம் சென்னை பல்லாவரம் பகுதியில் நடைபெற்று உள்ளது.
இன்ஸ்டாகிராம் மூலம் பழகி இளைஞர்களை மயங்கி, அவர்களைக்கொண்டு பல பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபடுத்தி வந்த வடமாநில இளம்பெண் சென்னையில் கைது செய்யப்பட்டார்.
சென்னையில் கஞ்சா உள்பட போதை பொருள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்களும் போதை பொருளுக்கு அடிமையாகி வருவது அதிகரித்து வருகிறது. பல பகுதிகளில் போதை பொருட்களை அரசியல் கட்சியினரே விற்பனை செய்து வருவதால், அதை தடுப்பதில் காவல்துறை மெத்தனம் காட்டி வருகிறது. இதனால், பாலியல் சம்பவங்கள், கொலை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், பல்லாவரம் பகுதியில் கஞ்சா நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதாக காவல்துறைக்கு புகார் வந்த நிலையில், காவல்துறையினர் பல பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, பல்லாவரம் அருகே திரிசூலம் ரயில்வே கேட் பகுதியில் சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்த இளம்பெண்ணை மடக்கி ரோந்து போலீசாரி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அவர் முறையான பதில் சொல்லாத நிலையில், அவர் வைத்திருந்த கைப்பையில் சோதனை போட்டனர். அப்போது, அவர் வைத்திருந்த பையில் 3 கிலோ கஞ்சா இருந்ததை அறிந்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளது. , கைதான பெண் திரிபுராவைச் சேர்ந்த பாயல் தாஸ் என்றும், அவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை இருப்பதும் தெரிய வந்துள்ளது. இவர், திரிபுராவில் ஒரு கிலோ கஞ்சாவை 5 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி, சென்னையில் 20 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்ததும் விசாரணையில் தெரியவந்தது.
மேலும், உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, அதற்கு தேவையான பணத்தை சம்பாதிக்க கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும், இதற்காக சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் மூலம் இளைஞர்களுடன் பழகி, அவர்களுக்கு ஆசைக்காட்டி, அவர்களைக்கொண்டு பல பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்து கல்லா கட்டி வந்ததும், இஸ்டாகிராம் மூலம் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, அவருடன் தொடர்புடையவர்களை தேடும் பணியை காவல்துறை முடுக்கி விட்டுள்ளனர்.
கஞ்சா விற்பனை செய்த இளம்பெண்ணை கைது செய்த போலீசார் அவரை புழல் சிறையில் அடைத்தனர்.
,,