மைசூர் :
கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள கைத்தாமரன ஹள்ளியை சேர்ந்த சந்துருவும், சசிகலாவும் கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இருவருக்கும் வரும் 22 ஆம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.
முடுக்கத்தூரில் உள்ள மல்லிகார்ஜுன சாமி கோயிலில் சாமி கும்பிட உறவினர்களுடன் காதல் ஜோடியினர் சென்றுள்ளனர். சாமி கும்பிட்ட பின்னர் அங்குள்ள காவிரி ஆற்றில் பயணம் செய்ய விரும்பினர்.
பரிசலில் ஏறி மறுகரைக்கு சென்றுள்ளனர். பரிசலில் நின்ற படி, சசிகலா போட்டோவுக்கு போஸ் கொடுத்த போது, ஹை ஹீல்ஸ் சறுக்கி ஆற்றில் விழுந்தார்.
பதறிப்போன காதலன் சந்துரு, சசிகலாவை காப்பாற்ற முற்பட்ட போது பரிசல் நடு ஆற்றில் கவிழ்ந்தது.
இதில் காதலர்கள் சந்துருவும், சசிகலாவும் ஆற்றில் மூழ்கி உயிர் இழந்தனர்.
– பா. பாரதி