பாட்னா: டெல்லியில் உட்கார்ந்து கொண்டு பீகாரிகளை கேலி செய்கிறீர்கள் என பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல்காந்தியை கடுமையாக விமர்சித்தார்.
பீஹார் மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஜன் சுராஜ் கட்சி தலைவரான தேர்தல் வியூகவாதி பிரசாந்த் கிஷோர் வலியுறுத்தியுள்ளார்.

பீகாரில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக அரசியல் சூடு தீவிரமடைந்து வரும் நிலையில், பிரசாந்த் கிஷோர் ராகுல்காந்தி மீது கடுமையாக தாக்கி பேசியுள்ளார். “நீங்கள் டெல்லியில் உட்கார்ந்து பீகாரிகளைப் பார்த்து சிரிக்கிறீர்கள். பிறகு எங்களுக்கு உபதேசம் செய்ய இங்கே வருகிறீர்கள்,” என்று அவர் கூறினார்.
தேர்தல் வியூக நிபுணரும், ஜன் சுராஜ் கட்சி தலைவருமான பிரசாந்த் கிஷோர், பீஹார் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், பிரசாந்த் கிஷோர் மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்து வருகிறார். அவரது பிரசாரத்தில், மாநில மற்றும் தேசிய அரசியல் கட்சிகள் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றன. மேலும், ,பல்வேறு கேள்வி எழுப்பி வருவதுடன், சமீபத்தில் ராகுல் கூறிய கருத்து குறித்து டுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த பிரசாந்த் கிஷோர், ராகுல் பீஹாருக்கு வருவதும், போவதுமாக இருக்கிறார். மக்களை சந்திப்பதற்காக எந்த யாத்திரை யையும் அவர் மேற்கொள்ளவில்லை. மக்களுடனான தனது தொடர்பை நிரூபிக்க ராகுல் ஒரு இரவாவது பீஹார் கிராமத்தில் தங்கியிருக்க முடியுமா என கேள்வி எழுபிபியவர், “நீங்கள் டெல்லியில் உட்கார்ந்து பீகாரிகளைப் பார்த்து சிரிக்கிறீர்கள். பிறகு எங்களுக்கு உபதேசம் செய்ய இங்கே வருகிறீர்கள்,” என காட்டமாக விமர்சித்துள்ளார்.
சீக்கியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும். அதேபோல, பீஹாரில் பிரச்சாரம் செய்வதற்கு முன்பு, இங்குள்ள மக்களிடம் ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும். பீஹாரிகள் உழைப்பதற்காக மட்டுமே பிறந்தவர்கள் என்றால், நீங்கள் ஏன் இங்கு வருகிறீர்கள்? தெலங்கானாவில் பிரச்சாரம் செய்து உங்கள் வாக்குகளைப் பெறுங்கள், எனக் கூறினார்.
மேலும், பீகாரிகள் தொழிலாளர்களாக வேலை செய்ய பிறந்தவர்கள்,” என்று பேசிய தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியின் கருத்துக்களுக்காகவும், மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், பீகார் மக்களுக்கு பல ஆண்டுகளாக காங்கிரஸ் காட்டிய புறக்கணிப்பு மற்றும் அவமரியாதை என்றும் கிஷோர் கடுமையாக சாடினார்.
“தெலுங்கானாவில், அவர்களின் முதல்வர் ரேவந்த் ரெட்டி. அவர் முதல்வராகி இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. அதற்கு முன்பு, அவர் தெலுங்கு தேசம் கட்சியில் இருந்தார், அதற்கு முன்பு, அவர் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவில் இருந்தார். முதல்வராக ஆன பிறகு, வேலை செய்வது பீகாரர்களின் டிஎன்ஏவில் உள்ளது என்ற கிஷோர், “அவர் ஏன் இதைச் சொன்னார்? ஏனென்றால் அவரது போட்டியாளரான கே.சி.ஆரின் பெரும்பாலான அதிகாரிகள் பீகார் பின்னணியைக் கொண்டிருந்தனர். எனவே பீகாரிகள் தெலுங்கானாவை நடத்துவதால் அது மோசமான நிலையில் உள்ளது என்று அவர் மறைமுகமாகக் கூறினார்,” என்று மேலும் கூறினார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1989 இல் பீகாருக்கு ₹50,000 கோடி தொகுப்பை அறிவித்தார், பீகாரை ஒரு வளர்ச்சி மையமாக மாற்றுவதாகக் கூறினார், ஆனால் நிதி ஒருபோதும் ஒதுக்கப்படவில்லை என்று கூறிய பிரசாந்த் கிஷோர், “அந்தப் பணம் எங்கே போனது? அதன் பிறகு காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது, எனவே பீகாருக்கு நீங்கள் என்ன செய்தீர்கள் என்று சொல்லுங்கள்?” என்று அவர் கேட்டார்.
பீகாரில் நடந்த மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியின் வெற்றியை ஒரு உதாரணமாகக் குறிப்பிட்டு பேசிய பிரசாந்த் கிஷோர், இந்த வெற்றிக்கு பீகார் தேர்தலில் சாதி மட்டுமே காரணி அல்ல என்றும், “பீகாரில், கடந்த 15 ஆண்டுகளாக, மக்களவைத் தேர்தலில் பாஜக பெரும் வெற்றியைப் பெற்று வருகிறது. அதாவது பாஜக வெற்றி பெறவில்லை, மக்கள் பிரதமர் மோடியின் மீது வைத்துள்ள நம்பிக்கையே வெற்றி பெறுகிறது.
“பீகாரில் உள்ள ஒவ்வொரு நபரும் சாதி அடிப்படையிலான அரசியலில் வாக்களிப்பதாக நீங்கள் (ராகுல்) சொன்னீர்கள். பீகாரில், மோடியின் பெயரில் ஒரு வாக்குச் சாவடி வைக்கப்படுவதாக நீங்கள் சொல்கிறீர்கள். எனவே, மோடியின் சாதியைச் சேர்ந்த எத்தனை பேர் பீகாரில் வாழ்கிறார்கள் என்று சொல்லுங்கள்? அவர்கள் வாழவில்லை என்றால், அவர்கள் மோடிக்கு எப்படி வாக்களித்தார்கள்? ஒவ்வொரு நபரும் சாதியை அடிப்படையாகக் கொண்டு வாக்களித்தால், பீகாரில் பிரதமர் மோடிக்கு யார் வாக்களித்தார்கள் என்று சொல்லுங்கள்? ஏனென்றால் பீகாரில் மோடியின் சாதியைச் சேர்ந்தவர்கள் யாரும் இல்லை,” என்றும் தெரிவித்தார்.