டெல்லி: வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வரும் விவசாயிகள், டெல்லி எல்லையில் தொடர் போராட்டம் நடத்தி வருவது சலசலப்பை ஏற்படுத்தியது.  இதற்கு அதிருப்தி தெரிவித்துள்ள உச்சநிதிமன்றம்,  மக்களின் அடிப்படை உரிமைகளை பறிப்பதற்கு உங்களுக்கு  என்ன அதிகாரம் இருக்கிறது கண்டித்துள்ளது.

மத்திய பாஜக அரசு அமல்படுத்தி உள்ளது 3 வேளாண் சட்டங்கள் மக்கள் விரோதமானது. இதை  மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும் என்று வடமாநில விவசாயிகள் டெல்லி எல்லையில் ஓராண்டுகளாக போராடி வருகின்றனர். போராட்டம் தொடர்பாக,  மத்திய அரசுக்கும் விவசாய அமைப்புகளுக்கும் இடையே  11 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு காணப்படவில்லை. இதனால், போராட்டம் தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில் டெல்லி நகரின் மையப்பகுதியான ஜந்தர் மந்தரில் போராட்டத்தை நடத்த விவசாயிகள் அனுமதி கேட்டனர். அதற்கு டெல்லி போலீசார் அனுமதி மறுத்து விட்டனர். காவல்துறையின் தடையை எதிர்த்து,  விவசாயிகள் சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். மனுவில்,  ஐந்தர் மந்தரில் அமைதியான முறையில்  சத்தியாகிரக போராட்டத்தை நடத்த இருக்கிறோம். எனவே அனுமதி தர வேண்டும் என்று  கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்த மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமனற் நீதிபதிகள் கான்வில்கர், சி.டி.ரவிக்குமார் தலைமையிலான அமர்வில் விசாரணை நடைபெற்றது. அப்போது, விவசாயிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், டெல்லிக்குள் போராட்டம் நடத்தினால்தான் மத்திய அரசு எங்கள் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கும் என்று நம்புகிறோம், அதனால் எங்களுக்கு டெல்லியில் போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கூறியதுடன்,   அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கு எங்களுக்கு உரிமை இருக்கிறது. அந்த உரிமை அடிப்படையில் அனுமதி தர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

ஆனால், அதை ஏற்க மறுத்த நீதிபதிகள்,  நீங்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தப்போவதாக கூறுகிறீர்கள். இதுவரை அமைதியாகத்தான் போராட்டம் நடத்தினீர்களா? உங்களை எப்படி நம்ப முடியும்.  டெல்லி நகரின்  கழுத்தை நெறிப்பது போல் நீங்கள் உங்கள் கட்டுப்பாட்டுக்குள் முடக்கி வைத்திருக்கிறீர்கள்,  நெடுஞ்சாலைகளை மறியல் என்ற பெயரில் முடக்குகிறீர்கள். இதனால் மக்களுக்கு எவ்வளவோ இடையூறுகள் ஏற்பட்டு வருகின்றன என்று கண்டித்ததுடன்,

உங்கள் போராட்டம் வன்முறையாகவும் மாறி  வருகிறது. அரசு மற்றும் பொதுமக்களின் உடைமைகளை சேதப்படுத்துகிறீர்கள்.  உங்கள் போராட்டத்துக்காக மக்களின் அடிப்படை உரிமைகளை பறிப்பதற்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்று கேள்வி எழுப்பினர்.

நீங்கள் எல்லையில் போராட்டம் நடத்தும்போதே எவ்வளவோ பிரச்சினைகள் ஏற்பட்டு உள்ள அப்படி இருக்கும்போது,  இப்போது நகரின் மைய பகுதியில் வந்து போராட்டம் நடத்துவதாக கூறுகிறீர்கள். எப்படி உங்களுக்கு அனுமதி தர முடியும்? என்று கேள்வி எழுப்பினர்.