வாஷிங்டன்:

ண்மையான உருளைக்கிழங்கில் படுக்கையறையுடன் தங்கும் விடுதி ஒன்று ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அமெரிக்காவில் அமைக்கப்பட்டுள்ள  இந்த சொகுசு விடுதி தற்போது வாடகைக்கு விடப்பட்டு வருகிறது.

அமெரிக்காவின் இடாகோ மாகாணத்தின்  தலைநகர் போய்சில் விவசாயம் நடைபெற்று வரு கிறது. அங்கு உருளைக்கிழங்கு பயிரிடுவதை ஊக்குவிக்கும் விதமாக, கடந்த 2012ஆம் ஆண்டு மிகப் பெரிய உருளைக்கிழங்கு விளைவிக்கப்பட்டது.

அந்த கிழங்கின்  28 அடி நீளம் மற்றும் 12 அடி அகலத்தில் 6 டன்  எடையுடன் கூடிய அந்த   உருளைக் கிழங்கு உலகிலேயே மிகப் பெரிய உருளைக்கிழங்காக அறியப்பட்டது. அதை பாதுகாத்து வந்தவர்கள், அதை  மக்களின் பார்வைக்காக ராட்சத வாகனம் மூலம் அமெரிக்கா முழுவதும் சுற்றிவந்தது.

கடந்த ஆண்டு அதன் சுற்றுப்பயணம் முடிவடைந்த நிலையில்,தற்போது, அதை  இரட்டை படுக்கை கொண்ட சிறிய தங்கும் விடுதியாக மாற்றியுள்ளனர்.

உருளைக்கிழங்கை குடைந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த தங்கும் விடுதியில், சொகுசு இருக்கைகள், படுக்கை மற்றும் கழிவறை என அனைத்து வசதிகளும் உள்ளன.

இந்த உருளை கிழங்கு விடுதி வசதி  பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறது. இதை வியாபாரமாக்க எண்ணியவர்கள், உருளைக்கிழங்கு விடுதியை வாடகைக்கு விட்டு வருகின்றனர்.

இந்த விடுதியில் ஒரு நாள் தங்குவதற்கு 200 டாலர் வசூலிக்கப்படுகிறது. இந்த விடுதியில் தங்க ஆர்வம் காட்டும் அமெரிக்கர்கள் தற்போது முன்பதிவு செய்து வருகின்றனர்.