சென்னை: தமிழகத்தில் எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்புக்கு 12ந்தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம், 16ந்தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும், கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
மருத்துவப்படிப்பு நுழைவுத் தேர்வான நீட் நுழைவுத்தேர்வுமுடிவுகள் கடந்தமாதம் வெளியானது. அதைத்தொடர்ந்து, அகில இந்திய ஒதுக்கீடுக்கான மருத்துவ கலந்தாய்வை மத்தியஅரசு நடத்தி முடித்து விட்டது. இதற்கிடையில், தமிழக மாணவர்களும் மருத்துவ படிப்பில் சேரும் வகையில் தமிழகஅரசு, நீட் தேர்வில் வெற்றிபெறும் அரசு பளளி மாணாக்கர்கள் மருத்துவ படிப்பில் சேர 7.5 சதவிகிதம் உள்ஒதுக்கிடு சட்டத்துக்கு மாநில கவர்னர் பன்வாரிலால் ஒப்புதல் வழங்க தாமதித்ததால், தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு குறித்து அறிவிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து, 7.5 சதவிகிதம் உள்ஒதுக்கீடு சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இழுத்தடித்து வந்த நிலையில், தமிழகஅரசு, அதிரடியாக உள் ஒதுக்கீடு தொடர்பான அரசாணையை அக்டோபர் 29ந்தேதி வெளியிட்டது. இதையடுத்து,கவர்னரும், தமிழக அரசின் உள்ஒதுக்கீடு சட்டத்துக்கு ஒப்புதல் வழங்கினார்.
இதையடுத்து மருத்துவ கலந்தாய்வு தொடர்பான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்த நிலையில், தற்போது தமிழகத்தில் எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் இளநிலை மருத்துவ மடிப்புக்கு 12ந்தேதி வரைஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவக் கல்வி இயக்கம் அறிவித்து உள்ளது. மேலும், 16ந்தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும், கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் மருத்துவக் கல்வி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு https://tnhealth.tn.gov.in/ இணையதளத்தை பார்க்க அறிவுறுத்தி உள்ளது.