குன்னூர்: “நீங்கதான் கடவுள்” என ராணுவ ஹெலிகாபடர் விபத்தின்போது உதவிய மலை கிராம மக்களிள், காவல்துறை, மற்றும் தீயணைப்பு துறையினருக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் பேசிய பேசிய லெப்.ஜெனரல் அருண் உணர்ச்சி பொங்க தெரிவித்தார்.
கடந்த 8ஆம் தேதி முற்பகல் 12.30 மணியளவில் கோவையிலிருந்து முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 14 அதிகாரிகள் குன்னூர் வெலிங்டன் ராணுவ முகாமுக்கு சென்ற ஹெலிகாப்டர் நீலகிரி மாவட்டம் குன்னூர் நஞ்சப்பா சத்திரம் பகுதியில் விபத்துக்குள்ளானது. இதில் ஹெலிகாப்டர் முழுவதும் உடனே தீ பரவிதால், அதில் சிக்கிய முப்படையின் தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேரையும், அப்பகுதி மகக்ள் உடனே ஓடிவந்து தங்களிடம் இருந்து தண்ணீரை ஊற்றி, போர்வைகளைக் கொண்டும் காப்பாற்றினர். உடனே அங்கு விரைந்துவந்த காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினரும் விரைந்து பணியாற்றி, தீயில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் 13 பேர் மரணமடைந்த நிலையில் குரூப் கேப்டன் மட்டும் அபாயகரமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையடுத்து, ஹெலிகாப்படர் விபத்தில் மீட்புப் பணிகளுக்கு உதவிய கிராம மக்கள், காவல்துறையினர், தீயணைப்புத்துறையினரை பாராட்டு மற்றும் நன்றி தெரிவிக்கும் வகையில் அவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழை சென்னை – தக்ஷிண் பாரத், ஜெனரல் ஆபிசர் கமாண்டிங் லெப்டினன்ட் ஜெனரல் அருண் வழங்கினார். மேலும் விபத்து நிகழ்ந்தவுடன் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்த கிருஷ்ணசாமி, குமார் தலா 5000 ரூபாயை பரிசாக வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசும்போது, விபத்து ஏற்பட்ட 10 நிமிடங்களில் அப்பகுதி மக்கள், மாவட்ட நிர்வாகமும் துரிதகதியில் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். தமிழ்நாடு முதலமைச்சர் அலுவலர்களுக்கு உடனடியாக உத்தரவிட்டு மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டார். அவருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாடு அரசின் துரித நடவடிக்கையால் மீட்புப் பணிகளில் எவ்வித இடையூறும் ஏற்படவில்லை. நீலகிரி மாவட்ட மக்கள் ஒத்துழைப்பு அளித்ததோடு, உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கடைகளை அடைத்தனர்.
விபத்து நடந்தவுடன் மக்கள் உடனடியாக விரைந்துசென்று உதவினர். உதவிய மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். எம்.ஆர்.சி. ராணுவ வீரர்கள் துரிதமாகச் செயல்பட்டனர் அவர்களுக்கும் நன்றி” , நெருக்கடி நேரத்தில் உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும், அசாதாரண சூழலை ஊடகங்கள் பொறுப்புடன் கையாண்டன எனவும் கூறினார்
முன்னதாக நஞ்சப்பா சத்திரம் பகுதிக்கு நேரில் சென்ற சென்னை – தக்ஷிண் பாரத், ஜெனரல் ஆபிசர் கமாண்டிங் லெப்டினன்ட் ஜெனரல் ஏ.அருண், ஹெலிகாப்டர் விபத்தின்போது உதவிய நஞ்சப்பா சத்திரம் பகுதி மக்களுக்கு இரு கைகளை வணங்கி தனது நன்றியினை தெரிவித்தார். பின் நஞ்சப்பா சத்திரம் பகுதி மக்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி காய்கறிகள் மற்றும் கம்பளி போன்ற உதவிப் பொருட்களை வழங்கிய லெப்.ஜெனரல் அருண் “நஞ்சப்பா சத்திரம் பகுதியில் ஹெலிகாப்டர் விபத்தின்போது மீட்புப் பணிகளுக்கு உதவிய கிராம மக்கள் அனைவருக்கும் ஒரு ஆண்டிற்கு வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் இலவசமாக சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். மாதந்தோறும் நஞ்சப்பா சத்திரம் பகுதியில் இலவசமாக இராணுவ மருத்துவர்களைக் கொண்டு ஒரு ஆண்டிற்கு மருத்துவ முகாம் நடைபெறும்.” என உறுதியளித்தார்.