பா.இரஞ்சித் தயாரிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தில் யோகி பாபு நாயகனாக நடிக்கப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இதனை புதுமுக இயக்குநர் ஷான் என்பவர் இயக்கவுள்ளதாகத் தெரிகிறது. இது தொடர்பான பேச்சுவார்த்தை அனைத்துமே முடிவுக்கு வந்துள்ளது.
கொரோனாஅச்சுறுத்தல் முடிந்து நிலைமை சீரானவுடன், பா.இரஞ்சித் – யோகி பாபு – ஷான் கூட்டணியின் படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.