காசியாபாத்
உத்திர பிரதேசத்தில் குற்றவாளிகள் சிறை செல்வார்கள் அல்லது என்கவுண்டரில் கொல்லப்படுவார்கள் என முதல்வர் யோகி தெரிவித்துள்ளார்.
உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்க இருக்கிறது. இதையொட்டி பல கூட்டங்களும் பேரணிகளும் நடை பெற்று வருகின்றன. நேர்று காசியாபாத் நகரில் உள்ள ராம் லீலா மைதானத்தில் ஒரு பேரணி நடை பெற்றது. அதில் உ பி முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்துக் கொண்டு உரையாற்றினார்.
யோகி, “கடந்த மார்சி மாதத்திற்கு முன்பு பலர் குற்றச் செயல் புரிந்து விட்டு மாநிலத்தை விட்டு வெளியேறி உள்ளனர். அதில் தொழிற்சாலை ஊழியர்கள், வர்த்தகர்கள், இளைஞர்கள் என பலரும் இருந்தனர். ஆனால் பா ஜ க ஆட்சிக்கு வந்த பின் மாநிலத்தில் சட்டம், ஒழுங்கு மிகவும் முன்னேறி உள்ளது. இனி உத்திரப் பிரதேசத்தில் குற்றவாளிகள் தப்பிச் செல்ல விட மாட்டோம். அவர்கள் சிறைக்குச் செல்வார்கள். அப்படி இல்லையெனில் போலீஸ் என்கவுண்டரில் கொல்லப்படுவார்கள்” என தன் உரையில் தெரிவித்தார்.