சென்னை:

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த மாத இறுதி வாரம் முதல் காய்கறி விலை உயர்ந்துள்ளது. மார்ச் மாதத்தோடு ஒப்பிடுகையில் தற்போது 40 சதவீத விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான காய்கறிகள் குறைந்தபட்சம் 20 சதவீத விலை உயர்வை சந்தித்துள்ளது.

உருளைகிழங்கு, வெங்காயம், சின்ன வெங்காயம் போன்றவை நிலையான விலையுடன் இருப்பதாக மொத்த விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல் சீசன் காய்கறிகளான முருங்கை போன்ற சில காய்கறிகள் விலை மலிந்துள்ளது.

நிலத்தடி நீர் ஆதாரம் குறைந்ததன் காரணமாக விளைச்சல் குறைந்ததன் காரணமாக ஏப்ரலில் விலை உயர்ந்துள்ளது. மேலும், கர்நாடகாவில் இருந்து வரவேண்டிய காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது. வெள்ளறி மற்றும் எலுமிச்சைக்கு தேவை அதிகரித்துள்ளதால் விலை உயர்ந்துள்ளது என்று கோய்ம்பேடு காய்கறி, கனி, பூ வியாபாரிகள் நலச் சங்க பொருளாளர் சுகுமார் தெரிவித்துள்ளார்.

கோயம்பேடுக்கு தினமும் 320 லோடு காய்கறிகள் வரும். மார்ச் மாதத்தோடு ஓப்பிடுகையில் 80 லோடு குறைந்துள்ளது.

[youtube-feed feed=1]