சென்னை

மிழகத்தில் நேற்று டாஸ்மாக் கடைகளில் ரூ.177.17 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை ஆகி உள்ளது

ஊரடங்கு தளர்வு காரணமாகத் தமிழகத்தில் பல இடங்களில் டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்கி வருகின்றன.

சென்னை உள்ளிட்ட சில இடங்களில் மட்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை.

இந்த மாதம் அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் தளர்வற்ற முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படுகிறது.

இதனால் ஞாயிறு அன்று டாஸ்மாக் கடைகள் மூடப்படுகின்றன.

ஆகவே சனிக்கிழமை டாஸ்மாக் கடைகளில் அதிக அளவில் விற்பனை நடைபெறுகிறது.

நேற்று சனிக்கிழமை என்பதால் ரூ.177.17 கோடிக்கு மதுபான விற்பனை நடந்துள்ளது.

ஆயினும் கடந்த சனிக்கிழமையை விற்பனையான ரூ.183 கோடியை விட இது ரூ,6 கோடி குறைவாகும்.