டெல்லி
மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையம் (யுபிஎஸ்சி) 2 ஆம் கட்ட தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள்ளன.
மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையம் (யு.பி.எஸ்.சி.) ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட சிவில் சர்வீசஸ் பதவிகளில் வரும் காலியிடங்களுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்து வருகிறது. முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்முகத்தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் இந்த பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுகிறார்கள்.
நடப்பாண்டுக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை கடந்த பிப்ரவரி மாதம் யு.பி.எஸ்.சி. வெளியிட்டது. கடந்த ஜூன் 15 ஆம் தேதி மொத்தம் 1,056 பணியிடங்களுக்கு நடந்த முதல் நிலை தேர்வை எழுதுவதற்காக நாடு முழுவதும் சுமார் 6 லட்சத்துக்கு மேற்பட்டோரும், தமிழகத்தில் இருந்து சுமார் 25 ஆயிரத்துக்கு மேற்பட்டோரும் ஆர்வம் காட்டினார்கள்.
தேர்வு முடிவு கடந்த ஜூலை மாதம் 1-ந்தேதி வெளியாகி அதில் 14,627 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். தமிழகத்தில் மட்டும் சுமார் 650-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்கள் அடுத்தகட்டமான முதன்மை தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 20, 21, 22, 28 மற்றும் 29-ந்தேதிகளில் காலை மற்றும் பிற்பகல் என நடந்தது.
நேற்ரி இந்த தேர்வு முடிவு நேற்று வெளியாகி இதில் நாடு முழுவதும் 2,845 பேர் வெற்றி பெற்றிருப்பதாகவும், தமிழகத்தில் மட்டும் 141 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் அடுத்தகட்டமாக நேர்முகத்தேர்வை சந்திக்க உள்ளனர். முதன்மை தேர்வு முடிவில் தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியல் யு.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.