ட்ச்

நேற்றிரவு ரிக்டர் அளவில் 4 ஆக குஜராத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நேற்றிரவு குஜராத் மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.  kஉஜராத்மாநிலத்தின் கூட்ச் மாவட்டம் ரபர் நகரில் இருந்து தென் மேற்கே 26 கிலோ மீட்டர் தொலைவை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

நேற்றிரவு 8.18 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

ஏற்கனவே குஜராத் மாநிலத்தில் கடந்த 2001 ஜனவரி 26 ஆம் தேதி ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவான நிலநடுக்கத்தில் 13 ஆயிரத்து 800 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.