சென்னை

நேற்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சென்னை வந்துள்ளார்.

நேற்று காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பெங்களூருவில் இருந்து தனி விமான மூலம் சென்னை வந்தடைந்தார்.

அவரை சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், ஆகியோர் பூங்கொத்து வழங்கியும் சால்வை அணிவித்தும் அவரை வரவேற்றனர்.

சென்னை விமான நிலையத்தில் கார்கே  செய்தியாளர்கலிடம் தாம், தனிப்பட்ட காரணத்திற்காக சென்னை வந்திருப்பதாகவும், மருத்துவமனையில் உள்ள தனது குடும்ப உறுப்பினரை சந்திப்பதற்காக செல்வதாகவும் தெரிவித்தார்.