டில்லி
இந்தியாவில் நேற்று 34,409 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,07,43,013 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 34,409 அதிகரித்து மொத்தம் 3,07,43,013 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 468 அதிகரித்து மொத்தம் 4,05,527 பேர் உயிர் இழந்துள்ளனர். நேற்று 35,330 பேர் குணமாகி இதுவரை 2,98,71,850 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 4,53,439 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மகாராஷ்டிராவில் நேற்று 9,558 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 61,22,893 ஆகி உள்ளது நேற்று 326 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,23,857 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 8,899 பேர் குணமடைந்து மொத்தம் 58,81,167 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,14,625 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கேரள மாநிலத்தில் நேற்று 13,772 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 30,25,466 ஆகி உள்ளது. இதில் நேற்று 142 பேர் உயிர் இழந்து மொத்தம் 14,250 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 11,414 பேர் குணமடைந்து மொத்தம் 29,00,600 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,10,137 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் நேற்று 2,530 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 28,64,868 ஆகி உள்ளது இதில் நேற்று 62 பேர் உயிர் இழந்து மொத்தம் 35,663 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 3,342 பேர் குணமடைந்து மொத்தம் 27,90,463 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 38,729 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 3,211 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 25,10,059 ஆகி உள்ளது இதில் நேற்று 57 பேர் உயிர் இழந்து மொத்தம் 33,253 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 3,565 பேர் குணமடைந்து மொத்தம் 24,43,141 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 33,665 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
ஆந்திர பிரதேச மாநிலத்தில் நேற்று 3,982 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 19,14,213 ஆகி உள்ளது. நேற்று 27 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 12,946 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 3,461 பேர் குணமடைந்து மொத்தம் 18,69,417 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 31,850 பேர் சிகிச்சையில் உள்ளனர்.