டில்லி
இந்தியாவில் நேற்று 24,692 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,22,49,900 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26,692 அதிகரித்து மொத்தம் 3,22,49,900 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 438 அதிகரித்து மொத்தம் 4,32,412 பேர் உயிர் இழந்துள்ளனர். நேற்று 36,862 பேர் குணமாகி இதுவரை 3,14,41,260 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 3,63,849 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மகாராஷ்டிராவில் நேற்று 4,145 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 63,96,805 ஆகி உள்ளது நேற்று 100 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,35,139 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 5,811 பேர் குணமடைந்து மொத்தம் 61,95,744 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 62,452 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கேரள மாநிலத்தில் நேற்று 12,294 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 37,02,417 ஆகி உள்ளது. இதில் நேற்று 142 பேர் உயிர் இழந்து மொத்தம் 18,743 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 18,542 பேர் குணமடைந்து மொத்தம் 35,10,909 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,72,250 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் நேற்று 1,065 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 29,30,529 ஆகி உள்ளது இதில் நேற்று 28 பேர் உயிர் இழந்து மொத்தம் 37,007 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,486 பேர் குணமடைந்து மொத்தம் 28,71,448 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 20,048 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 1,851 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 25,90,632 ஆகி உள்ளது இதில் நேற்று 28 பேர் உயிர் இழந்து மொத்தம் 34,547 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,911 பேர் குணமடைந்து மொத்தம் 25,35,715 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 20,370 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
ஆந்திர பிரதேச மாநிலத்தில் நேற்று 909 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 19,94,606 ஆகி உள்ளது. நேற்று 13 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 13,660 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,543 பேர் குணமடைந்து மொத்தம் 19,63,728 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 17,218 பேர் சிகிச்சையில் உள்ளனர்.