சென்னை: மொழியை வைத்து தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் அரசியல் செய்து வருகின்றன. ஒவ்வொருவருக்கும் தனது தாய்மொழியே உயர்ந்தது.  மற்ற மொழிகள் படிப்பது அவரவர்களின் தனிப்பட்ட உரிமை. இதை தடுக்க யாருக்கும் உரிமை கிடையாது. காலத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப, அவரவர்கள் தங்களின் தேவையை உணர்ந்து. அதை பூர்த்தி செய்து கொள்வார்கள்.

நாட்டிலேயே முழு கல்வி அறிவுபெற்ற மாநிலமான கேரளாவில் இதுபோன்ற பிரச்சினைகள் கிடையாது. தமிழ்நாடும் கல்வி அறிவில் வளர்ந்து வரும் மாநிலமாக உள்ள நிலையில்,  மக்களின் மனநிலை குறித்து யாரும் சிந்திக்காமல்,  ஆளும் கட்சி முதல் எதிர்க்கட்சிகள் வரை அனைத்து கட்சிகளும், தங்களின் வளர்ச்சி ஒன்றையே குறிக்கோளாக கொண்டு, மொழி அரசியல், மத அரசியல், ஜாதி அரசியல் நடத்தி,  மாநிலத்தில்  சலசலப்பை ஏற்படுத்தி வருகின்றன.

இருமொழி கொள்கை, மும்மொழி கொள்கை என அரசியல் கட்சிகள்தான் பிளவுபட்டு,  கொண்டிருந்த நிலையில், தற்போது  இதைக்கொண்டு, மக்களிடையேயும் மாறுபட்ட கருத்துக்களை புகுத்தி,   பிளவுகளை ஏற்படுத்தும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் மும்மொழி கொள்கை விவகாரம் தொடர்பாக திமுக-பாஜக இடையே கடும் விவாதம் நடைபெற்று வருகிறது

சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கடுமையாக விமர்சித்து பேசி இருந்தார். அதாவது, உதயநிதி ஸ்டாலினுக்கு தைரியம் இருந்தால் பிரதமர் மோடியை விமர்சித்து பார்க்கட்டும் என கூறினார். பிரதமர் மோடியை கெட் அவுட் என கூற தைரியம் இருக்கிறதா உதயநிதிக்கு? என கேள்வி எழுப்பினார்.

ஆனால், இதற்கு உதயநிதி பதில் அளிக்காமல். ஏற்கனவே  அண்ணா அறிவாலயம் குறித்து அண்ணாமலை பேசியை சுட்டிக்காட்டி, முடிந்தா அண்ணாமலையை,  அண்ணா சாலை பக்கம் வர சொல்லுங்க என ஏளமான கூறினார்.  இதற்கு  அண்ணாமலை , அண்ணாசாலைக்கு தனி ஒருவனாக வரத்தயார் என்று பதிலடி கொடுத்தார். இடத்தை கூறினால்  தான் வரத்தயார் என்று சவால் விடுத்துள்ளார்.

இதன் தொடர்ச்சியாக திமுக சார்பில்,  #GetOutModi ஹேஸ்டேக் சமூக வலைதளத்தில்  டிரெண்டிங் செய்யப்பட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இன்று #GetOutStalin ஹேஸ்டேக்கை பாஜகவினர்  டிரெண்டிங் செய்து வருகின்றனர்.

திமுகவினருக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இன்று #GetOutStalin ஹேஸ்டேக் டிரெண்டிங் ஆகி வருகிறது.