டில்லி

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,07,67,206 ஆக உயர்ந்து 1,54,522 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

நேற்று இந்தியாவில் 8,579 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 1,07,67,353 ஆகி உள்ளது.  நேற்று 94 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1,54,522 ஆகி உள்ளது.  நேற்று 13,443 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,04,47,450 ஆகி உள்ளது.  தற்போது 1,60,728 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 1,948 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 20,28,347 ஆகி உள்ளது  நேற்று 27 பேர் உயிர் இழந்து மொத்தம் 51,109 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 3,289 பேர் குணமடைந்து மொத்தம் 19,32,294 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 43,071 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 388 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,39,775 ஆகி உள்ளது  இதில் நேற்று 3 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,220 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 470 பேர் குணமடைந்து மொத்தம் 9,21,592 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 5,944 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 3,459 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,32,638 ஆகி உள்ளது.  இதில் நேற்று 17 பேர் உயிர் இழந்து மொத்தம் 3,761 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 5,215 பேர் குணமடைந்து மொத்தம் 8,59,421 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 69,216 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 64 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,87,900 ஆகி உள்ளது  நேற்று ஒருவர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 7,154 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 99 பேர் குணமடைந்து மொத்தம் 8,79,504 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,242 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 502 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,38,842 ஆகி உள்ளது  இதில் நேற்று 7 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,363 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 517 பேர் குணமடைந்து மொத்தம் 8,21,947 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 4,532 பேர் சிகிச்சையில் உள்ளனர்.