டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,19,71,004 ஆக உயர்ந்து 1,61,586 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 62,632 பேர் அதிகரித்து மொத்தம் 1,19,71,004 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 311 அதிகரித்து மொத்தம் 1,61,586 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 28,728 பேர் குணமாகி  இதுவரை 1,13,81,578 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 4,83,011 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 35,726 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 26,73,461 ஆகி உள்ளது  நேற்று 166 பேர் உயிர் இழந்து மொத்தம் 54,073 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 14,523 பேர் குணமடைந்து மொத்தம் 23,14,475 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 3,03,475 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 2,055 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 11,15,778 ஆகி உள்ளது.  இதில் நேற்று 14 பேர் உயிர் இழந்து மொத்தம் 4,568 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 2,084 பேர் குணமடைந்து மொத்தம் 10,86,669 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 24,227 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 947 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,83,930 ஆகி உள்ளது  இதில் நேற்று 8 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,492 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,179 பேர் குணமடைந்து மொத்தம் 9,50,167 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 21,252 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 947 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,97,810 ஆகி உள்ளது.  இதுவரை மொத்தம் 7,203 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 377 பேர் குணமடைந்து மொத்தம் 8,85,892 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 4,715 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 2,089 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,77,279 ஆகி உள்ளது  இதில் நேற்று 9 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,659 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,241 பேர் குணமடைந்து மொத்தம் 8,52,463 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 12,157 பேர் சிகிச்சையில் உள்ளனர்.