டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,14,74,302 ஆக உயர்ந்து 1,59,250 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35,838 பேர் அதிகரித்து மொத்தம் 1,14,74,302 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 171 அதிகரித்து மொத்தம் 1,59,250 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 17,793 பேர் குணமாகி  இதுவரை 1,10,61,170 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 2,49,197 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 23,179 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 23,70,507 ஆகி உள்ளது  நேற்று 84 பேர் உயிர் இழந்து மொத்தம் 53,080 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 9,138 பேர் குணமடைந்து மொத்தம் 21,63,391 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,52,760 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 2,098 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 10,96,393 ஆகி உள்ளது.  இதில் நேற்று 13 பேர் உயிர் இழந்து மொத்தம் 4,436 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 2,815 பேர் குணமடைந்து மொத்தம் 10,66,259 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 25,394 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 1,275 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,63,614 ஆகி உள்ளது  இதில் நேற்று 4 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,407 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 479 பேர் குணமடைந்து மொத்தம் 9,40,968 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 10,220 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 253 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,92,522 ஆகி உள்ளது.  நேற்று ஒருவர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 7,186 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 137 பேர் குணமடைந்து மொத்தம் 8,83,642 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,694 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 945 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,62,374 ஆகி உள்ளது  இதில் நேற்று 8 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,564 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 576 பேர் குணமடைந்து மொத்தம் 8,43,999 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 5,811 பேர் சிகிச்சையில் உள்ளனர்.