டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,14,38,464 ஆக உயர்ந்து 1,59,079 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27,869 பேர் அதிகரித்து மொத்தம் 1,14,38,464 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 187 அதிகரித்து மொத்தம் 1,59,079 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 17,746 பேர் குணமாகி  இதுவரை 1,10,43,377 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 2,31,335 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 17,864 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 23,47,328 ஆகி உள்ளது  நேற்று 81 பேர் உயிர் இழந்து மொத்தம் 52,996 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 9,510 பேர் குணமடைந்து மொத்தம் 21,54,253 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,38,813 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 1,970 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 10,94,295 ஆகி உள்ளது.  இதில் நேற்று 15 பேர் உயிர் இழந்து மொத்தம் 4,423 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 2,884 பேர் குணமடைந்து மொத்தம் 10,63,444 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 26,124 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 1,135 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,62,339 ஆகி உள்ளது  இதில் நேற்று 6 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,403 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 561 பேர் குணமடைந்து மொத்தம் 9,40,489 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 9,428 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 261 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,92,269 ஆகி உள்ளது.   இதுவரை மொத்தம் 7,185 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 125 பேர் குணமடைந்து மொத்தம் 8,83,505 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,579 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 867 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,61,429 ஆகி உள்ளது  இதில் நேற்று 5 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,556 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 561 பேர் குணமடைந்து மொத்தம் 8,43,423 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 5,450 பேர் சிகிச்சையில் உள்ளனர்.