டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,13,85,158 ஆக உயர்ந்து 1,58,762 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26,513 பேர் அதிகரித்து மொத்தம் 1,13,85,158 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 120 அதிகரித்து மொத்தம் 1,58,762 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 17,590 பேர் குணமாகி  இதுவரை 1,10,05,445 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 2,16,297 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 16,620 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 23,14,413 ஆகி உள்ளது  நேற்று 50 பேர் உயிர் இழந்து மொத்தம் 52,861 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 8,861 பேர் குணமடைந்து மொத்தம் 21,34,072 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,26,231 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 1,792 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 10,91,271 ஆகி உள்ளது.  இதில் நேற்று 15 பேர் உயிர் இழந்து மொத்தம் 4,382 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 3,238 பேர் குணமடைந்து மொத்தம் 10,57,097 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 29,474 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 934 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,60,272 ஆகி உள்ளது  இதில் நேற்று 2 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,390 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 609 பேர் குணமடைந்து மொத்தம் 9,39,499 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 8,364 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 298 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,91,861 ஆகி உள்ளது.   நேற்று 2 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 7,184 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 164 பேர் குணமடைந்து மொத்தம் 8,83,277 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,400 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 759 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,59,726 ஆகி உள்ளது  இதில் நேற்று 4 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,547 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 647 பேர் குணமடைந்து மொத்தம் 8,42,309 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 4,870 பேர் சிகிச்சையில் உள்ளனர்.