டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,29,26,061 ஆக உயர்ந்து 1,66,892 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,26,265 பேர் அதிகரித்து மொத்தம் 1,29,26,061 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 684 அதிகரித்து மொத்தம் 1,66,892 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 59,132 பேர் குணமாகி  இதுவரை 1,18,48,905 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 9,05,021 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 59,907 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 31,73,261 ஆகி உள்ளது  நேற்று 322 பேர் உயிர் இழந்து மொத்தம் 56,652 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 30,296 பேர் குணமடைந்து மொத்தம் 26,13,627 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 5,01,59 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 3,502 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 11,44,595 ஆகி உள்ளது.  இதில் நேற்று 16 பேர் உயிர் இழந்து மொத்தம் 4,711 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,955 பேர் குணமடைந்து மொத்தம் 11,08,078 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 31,491 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 6,976 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 10,33,560 ஆகி உள்ளது  இதில் நேற்று 35 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,731 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 2,794 பேர் குணமடைந்து மொத்தம் 9,71,556 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 49,254 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 2,331 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,13,274 ஆகி உள்ளது.  நேற்று 11 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 7,262 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 863 பேர் குணமடைந்து மொத்தம் 8,92,736 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 13,276 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 3,986 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,11,110 ஆகி உள்ளது  இதில் நேற்று 17 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,821 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,824 பேர் குணமடைந்து மொத்தம் 8,70,546 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 27,743 பேர் சிகிச்சையில் உள்ளனர்.