குருகிராம்
பிரபல டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ் நேற்று சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் அவருடைய தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்/

கடந்த 2000 ஆம் வருடம் மார்ச் 23, அன்று பிறந்த ராதிகா யாதவ் ஹரியானாவைச் சேர்ந்த ஒரு வளர்ந்து வரும் டென்னிஸ் வீராங்கனை ஆவார். டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ் தனது தந்தையால் குருகிராம் சுஷாந்த் லோக்-II-ல் உள்ள அவர்களது இல்லத்தில் வியாழக்கிழமை மதியம் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
எனவே ராதிகாவின் தந்தை தீபக் யாதவ் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார். தீபக் ஐந்து முறை சுட்டு அதில் மூன்று குண்டுகள் ராதிகாவைத் தாக்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது தீபக் யாதவ் கைது செய்யப்பட்டு, குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட உரிமம் பெற்ற ரிவால்வர் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
போலீசாரின் தகவல்படி, குற்றம் சாட்டப்பட்டவரிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ராதிகா ஒரு டென்னிஸ் அகாடமியை நடத்தி வந்துள்ளார் என்பதும், இதற்கு அவரது தந்தை எதிர்ப்பு தெரிவித்துள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது. இது தொடர்பான தகராறே தீபக் தனது மகளை மூன்று முறை சுட்டுக் கொல்ல வழிவகுத்தது என்று போலீசார் தெரிவித்தனர்.