மும்பை: யெஸ் வங்கியின் பங்குதாரர்கள், 3 ஆண்டுகளுக்கு முன்னதாக, தங்களின் பங்குகளில் 25%க்கு மேல் விற்பனை செய்ய முடியாது என்ற விதிமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த வகைப்பாட்டில் சில்லறை முதலீட்டாளர்களும் அடக்கம். அதேசமயம், 100க்கும் குறைவான யெஸ் வங்கிப் பங்குகளை வைத்துள்ள சில்லறை முதலீட்டாளர்களுக்கு இதிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது.
வங்கியைக் காப்பாற்றுவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாய் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 13ம் தேதியிலிருந்தே(மார்ச்) இந்த விதிமுறை நடைமுறைக்கு வந்துவிட்டதாக கூறப்படுகிறது. அதேசமயம், “இது ஒரு வழக்கத்திற்கு மாறான முடிவு. பங்குகளில் நிலையற்ற தன்மையைக் குறைப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம்.
ஆனால், பங்குகள் விற்பனையில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக, வங்கியின் முறையான செயல்பாட்டிலும், மறுமூலதனமாக்கத்திலும் அரசு கவனம் செலுத்த வேண்டும். அதுதான் பலன் தரும்” என்றுள்ளனர் பொருளாதார வட்டாரத்தில் தொடர்புடையவர்கள்.