சானா
ஏமன் அரசு கேரள நர்ஸ் நிமிஷா பிரியாவின் மரண தண்டனைஐ ஒத்தி வைத்துள்ளது..

கேரள மாநிலத்தை சேர்ந்த நர்ஸ் நிமிஷா பிரியாவின் மீது கொலை குற்றம் சாட்டப்பட்டு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது
நாளை ஏமன் நாட்டில் கேரள நர்ஸ் நிமிஷா பிரியாவுக்கு நாளை மரண தண்டனை நிறைவேற்றப்பட இருந்ததால் தண்டனையை நிறுத்த பல முயற்சிகள் எடுக்கப்பட்டன.
இதுவரை மத்திய அரசு அவரை காப்பாற்ற எடுத்த முயற்சிகள் எதுவும் பலன் தரவில்லை. இன்று கடைசிக்கட்டப் பேச்சுவார்த்தை நடைபெறுவதாகத் தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் கேரள நர்ஸ் நிமிஷா பிரியாவுக்கு நாளை நிறைவேற்றப்பட இருந்த மரண தண்டனை நிறுத்திவைக்கப்பட்டதாகத் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
Patrikai.com official YouTube Channel