திருவனந்தபுரம்

ந்திய வானிலை ஆய்வு மையம் கேரளாவின் 7 மாவட்டங்க்ளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம்.

”கேரளாவில் 7 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

கேரள மாநிலத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், திருவனந்தபுரம், பத்தினம் திட்டம், எர்ணாகுளம், திரிசூர், பாலக்காடு, மலப்புரம் மற்றும் வயநாடு ஆகிய பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த பகுதிகளில் 64.5 மி.மீ முதல் 115.5 மி.மீ வரை மழை பெய்யும்.”

என்று தெரிவித்துள்ளது.

“மஞ்சள்” எச்சரிக்கை என்பது, வானிலை முன்னறிவிப்பு எச்சரிக்கைகளில் ஒரு முதல் நிலை எச்சரிக்கையாகும், இது மிதமான மழை பெய்யும் என்பதை குறிக்கும் வகையில் வானிலை மையத்தால் வெளியிடப்படுகிறது.