வேலூர்:

ணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் ஏலகிரி மலையைச் சேர்ந்த பள்ளி மாணவனை ஒகேனக்கல் அழைத்துச் சென்று கொலை செய்தது தொடர்பான வழக்கில்  7 ஆண்டுக்கு பிறகு 2பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏலகிரி மலையில் கைதுசெய்யப்பட்ட பெருமாள் மற்றும் காளியம்மாள்

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த வேலை கிரி மலையிலுள்ள அத்தனாவூர் பகுதியை சேர்ந்தவர் குட்டி (வயது 45 ). இவர் விவசாய வேலை செய்து வருகிறார். இவருக்கும் ஏலகிரி மலையில் உள்ள கொட்டாவூர் பகுதியை சேர்ந்த கருணாநிதி என்பவரின் மகன் பெருமாள் (35). என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த 2013 ஆம் ஆண்டு மீண்டும் குட்டிக்கும் பெருமாளுக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக  வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பெருமாள் என்பவர் ஏலகிரி மலையில் உள்ள தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு பயின்று வந்த குட்டி என்பவரின் மகன் ராகேஷ் குமார் ( 9). என்பவரை கடத்திச்சென்று தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் வைத்து ஆற்றில் தள்ளிக் கொலை செய்துள்ளனர்.

பெரும் பரபரப்பையும் சோகத்தை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து ஏலகிரிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து,  கொலை வழக்கில் ஈடுபட்ட பெருமாள் (35). என்பவரையும் உடந்தையாக இருந்த நிலாவூர் அருகே உள்ள ராயனேரி பகுதியை சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மனைவி காளியம்மாள் (36). ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

வழக்கில் 2 பேரும், ஜாமீனில் வெளிவந்த நிலையில், திடீரென தலைமறைவாயினர்.  அவர்களை தேடும் பணியில், ஜோலார்பேட்டை இன்ஸ்பெக்டர் பழனி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.  இந்த நிலையில், தலைமறைவாக இருந்து வந்த,  பெருமாள் மற்றும் காளியம்மாள் ஆகிய இருவரும், ஏலகிரி மலையில் உள்ள நிலா ஊரில் கதவு நாச்சி அம்மன் கோயிலுக்காக  வந்தபோது, காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர். பின்னர்,  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு கைதான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.