பெங்களூரு:

ர்நாடக சட்டமன்றத்தில் மாலை 4 மணிக்கு  நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், சரியாக 4 மணிக்கு தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு சபையில் இருந்து வெளியேறினார் எடியூரப்பா.

இது பாரதியஜனதா கட்சி விழுந்த முதல் சம்மட்டி அடி என்று விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இன்று காலை 11 மணி வரை 100 சதவிகிதம் வெற்றி பெறுவேன் என்று மீண்டும் மீண்டும்  கூறிவந்த  எடியூரப்பா ராஜினாமா செய்ய காரணம் என்ன என்பது குறித்து ஆராய்ந்தால், பாஜவின் அதிகாரப்போதைதான் என்பது தெரிய வரும்.

இந்த அதிகார போதையின் காரணமாகவே  குதிரை பேரம் போன்ற சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளை தைரையமாக மேற்கொண்டனர். ஆனால், கர்நாடகாவில் அவர்களது பாச்சா பலிக்கவில்லை. அவர்களின்  ஒவ்வொரு நடவடிக்கைகளும் காங்கிரசார்  கண்காணிக்கப்பட்டு, ஆங்காங்கே செக் வைக்கப்பட்டதால், இன்று எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இதுவரை பல மாநிலங்களில் சிபிஐ, வருமான வரித்துறை போன்றவற்றால் மிரட்டி, ஆட்சியை கைப்பற்றி வந்த பாரதியஜனதாவுக்கு கர்நாடகாவில் விழுந்த அடி அவர்களின் மொள்ளமாறித்தனத்துக்கு விழுந்த சம்மட்டி அடி.

மாநில கவர்னர்களின் அத்துமீறலுக்கும் இது ஒரு பாடம். பெரும்பான்மை இல்லாத ஒரு கட்சியை, ஆட்சி பொறுப்பேற்க வைத்த வஜுபாய் போன்ற கவர்னர்கள் விரட்டியடிக்கப்பட வேண்டியவர்கள்.

இன்றைய எடியூரப்பாவின் ராஜினாமாவுக்கு, கர்நாடக காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் சிவகுமாரின் செயல்பாடும் ஒரு காரணம். மேலும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அதிரடியாக சட்டப்போராட்டம் நடத்தியும்,  சட்டசபை நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்பு செய்யும்படி உச்சநீதி மன்றத்தில் உத்தரவு பெற்றதோடு நிற்காமல், இன்றைய சட்டசபை நிகழ்ச்சிகளை காண நேரடியாக சபை வளாகத்திற்குள் அமர்ந்ததும் மற்றொரு காரணம்.

இதற்கிடையில், பாஜவுக்கு  ஆதரவு தருவதாக கூறிய 2 எம்எல்ஏக்களும், மறைத்து வைக்கப்பட்டிருந்த  நிலையில், அவர்கள் இருக்கும்  காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் சிவகுமாரால் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் 2 பேரையும்  அவரது பாதுகாப்புடன் சட்டமன்றம் அழைத்து வரப்பட்டனர்.

மேலும், எடியூரப்பா மற்றும் முரளிதரராவ், காங்கிரஸ் எம்எல்ஏ பட்டீலுடன்  பேசிய ஆடியோவை வெளியிட்டு காங்கிரசார் பாஜகவுக்கு மேலும்  கிலியை உண்டு பண்ணினர்.

இதன் காரணமாக மதிய இடைவேளையின்போது, எடியூரப்பா திடீரென சபாநாயகரை சந்தித்து தனியாக சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார். மேலும்,  பா.ஜ., தலைவர் அமித் ஷா மற்றும் பிரகாஷ் ஜாவேத்கருடன் தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார்.

காங். முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமார்

இந்நிலையில், சட்டசபை தொடங்கியதும் நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் இது தனக்கு அக்னி பரீட்சை என்று கூறிய எடியூரப்பா, இறுதியில், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தனது பதவியை ராஜினாமா செய்வதாக கூறிவிட்டு சபையில் இருந்து வெளியேறினார்.

இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதை யொட்டி காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், வீரப்ப மொய்லி, கார்கே போன்ற தலைவர்கள்  சட்டசபை லாபியில் அமர்ந்து கவனித்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக காங்கிரஸ், ஜேடிஎஸ் நடத்தி வந்த சட்டப் போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. பாரதிய ஜனதாவின்  அதிகார அத்துமீறலுக்கு முதல் சம்மட்டி அடி கர்நாடகாவில் விழுந்துள்ளளது.

இதன் எதிரொலி அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும்…..