டில்லி

த்திய அரசு ஜெயந்த் சின்ஹாவை நிதி அமைச்சகத்தில் இருந்து எதற்காக மாற்றியது என யஷ்வந்த் சின்ஹா கேள்வி எழுப்பி உள்ளார்.

பா ஜ க மூத்த தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா நாட்டின் பொருளாதாரத்தை பிரதமர் மோடியும், அருண் ஜெட்லியும் நாசமாக்கி விட்டதாக குற்றம் சாட்டினார்.   அதற்கு  பா ஜ க தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துனர்.  அவரது மகனும் பா ஜ க அரசின் சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சருமான ஜெயந்த் சின்ஹா பதில் அளித்தார்.

இந்நிலையில் யஷ்வந்த் சின்ஹா தொலைக்காட்சி சேனல்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.  அதில், “நாட்டின் பிரச்சினைகளை பேச பிரதமர் மோடியிடம் நான் நேரம் கேட்டேன்.   ஆனல் தரப்படவில்லை.  அதனால்தான் ஊடகங்களின் மூலமாக என் கருத்தை தெரிவித்தேன்.   பிரதமருக்கு அளிக்க என்னிடம் பல யோசனைகள் உள்ளது.   அரசு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், அமைச்சர் ப சிதம்பரம் ஆகியோரின் கருத்துக்களை நிராகரிக்கக் கூடாது.

சென்ற கால் ஆண்டுக்கும் வரும் காலாண்டுக்கு இடையில் தற்போது இந்தியாவின் பொருளாதாரம் வீழ்ச்சிப் பாதையில் சென்றுக் கொண்டு இருக்கிறது.  பொருளாதார பிரச்னிகள் மேலும் மேலும் அதிகரித்ததால் நான் இது குறித்து கருத்து தெரிவித்தேன்.  இனியாவது இந்த அரசு நான் கூறிய பிரச்னைகளுக்கு தீர்வு காண சரியான நடவடிக்கைகள் எடுக்கும் என நம்புகிறேன்.

எனது குற்றச்சாட்டுகளுக்கு மத்திய சிவில் விமான போக்குவரத்துத் துறையின் அமைச்சர் ஜெயந்த் சின்ஹா பதில் அளித்துள்ளார்.  ஆனால் பதிலளிக்க வேண்டியது நிதித் துறை அமைச்சர் அல்லது அரசு செய்தித் தொடர்பாளர்தான்.   ஒருவேளை எனது கேள்விகளுக்கு பதில் அளிக்க ஜெயந்த் சின்ஹாதான் தகுதியானவர் என அரசு நினைத்திருக்கலாம்.   அப்படி இருந்தால் அவரை ஏன் நிதித்துறை அமைச்சகத்தில் இருந்து மாற்றினார்கள்?”  என அந்த பேட்டியில் கூறி உள்ளார்.