பீஜிங்

டந்து முடிந்த கம்யூனிஸ்ட் கட்சி ஆண்டு மாநாட்டில் ஜி ஜின்பிங் மேலும் 15 வருடங்களுக்கு  சீன அதிபராகத் தொடர கட்சி ஒப்புதல் அளித்துள்ளது.

 

சீனாவின் அதிபராகக் கடந்த 2012 ஆம் ஆண்டு ஜி ஜின்பிங் பதவி ஏற்றார்.  அதன்பிறகு அவரது பதவிக்காலம் 2022 வரை நீட்டிக்கப்பட்டது.   கடந்த நான்கு நாட்களாகச் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஆண்டு மாநாடு நடந்து வந்தது.

இந்த மாநாட்டில் ஜி ஜின்பிங் செயல்பாடுகள் மதிப்பிடப்பட்டன.   அதையொட்டி அவரது பதவிக்காலம் மேலும் 15 வருடங்களுக்கு நீட்டிக்கக் கட்சி ஒப்புதல் அளித்துள்ளது.  அதாவது வரும் 2035 வரை அவர் சீன அதிபராகப் பதவி வகிக்க உள்ளார்.

இந்த மாநாட்டில் அவர் 2035 ஆம் வருடம் வரையிலான வளர்ச்சி திட்டங்களை அறிவித்தார்.   இதன் மூலம் அவர் சீனாவை உலக வல்லரசாக மற்ற நினைப்பதாகவும் தனது வாழ்நாள் முழுவதும் அதிபராக விரும்புவதாகவும்  சீன அரசியல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.