உலக பணக்கார பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் எலான் மஸ்க் அடுத்ததாக GMail க்கு நிகராக X Mail என்ற மின்னஞ்சல் தளத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.
1999ம் ஆண்டு தனது Zip2 நிறுவனத்தை ஜிப் போட்டு மூடியதால் கிடைத்த பணத்தில் டெஸ்லா முதல் ஸ்பேஸ்-எக்ஸ் வரை பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்து தன்னை உலகின் முன்னணி பணக்காரராக நிலை நிறுத்தியுள்ளார் எலான் மஸ்க்.
தவிர, அமெரிக்க அதிபரை தீர்மானிக்கும் நிலைக்கு உயர்ந்துள்ளதோடு ரஷ்யா-வுக்கு எதிராக போர் தொடுத்து வரும் உக்ரைனுக்கு ஆதரவாக தனது ஸ்டார்லிங்க் நிறுவனம் மூலம் இன்டர்நெட் இணைப்பு கொடுத்து இந்த நூற்றாண்டில் உலகின் செல்வாக்கு மிக்க தலைவர்களில் ஒருவராக உருவாகியுள்ளார் எலன் மஸ்க்.
எலன் மஸ்க் தனது ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்லிங்க் இன்டர்நெட் சேவையை முடக்க ரஷ்யா அறிமுகப்படுத்தியுள்ள ‘ஸ்டார்லிங்க் கில்லரை’ பற்றி கவலையின்றி கடந்த நூற்றாண்டில் உலகின் முன்னணி பணக்காரராக உலகை ஆட்டிப் படைத்த பில் கேட்ஸை திவாலாக்கப் போவதாக சவால் விட்டு வருகிறார்.
இந்த நிலையில், ஜிமெயில் மற்றும் ஆப்பிள் மெயில் ஆகியவற்றுக்குப் போட்டியாக X Mail என்ற பெயரில் புதிய ஈமெயிலை அறிமுகப்படுத்த உள்ளதாக தற்போது அறிவித்துள்ளார்.