WWE ஜாம்பவான் ஹல்க் ஹோகன் மாரடைப்பால் இன்று காலமானார்.

தொழில்முறை மல்யுத்தத்தின் மிகச்சிறந்த ஐகான்களில் ஒருவரான ஹல்க் ஹோகனுக்கு வயது 71.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கிளியர்வாட்டரில் உள்ள அவரது வீட்டில் இன்று (வியாழக்கிழமை) காலை அசைவற்ற நிலையில் இருந்துள்ளார்.

இதையடுத்து அவசர உதவியை தொடர்பு கொண்டதை அடுத்து அவர்கள் வந்து பார்த்ததில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதை உறுதி செய்தனர்.

டெர்ரி ஜீன் போல்லியா என்ற உண்மையான பெயர் கொண்ட ஹோகன், 1983 இல் முதன்முதலில் WWE அரங்கில் நுழைந்தார். 80கள் மற்றும் 90களின் முற்பகுதியில் WWEன் அடையாளமாக உருவெடுத்தார்.

1993 ஆம் ஆண்டில், திரைத்துறையில் நடிப்பதில் ஆர்வம் காட்டிய அவர் WWEல் இருந்து தற்காலிகமாக வெளியேறினார், ஆனால் அவர் எப்போதும் தொழில்முறை மல்யுத்தத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு நபராகவே இருந்தார்.

அவரது மறைவு செய்தி விளையாட்டு உலகத்தையும் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

[youtube-feed feed=1]